|| Tukaram ||
Tukaram is very dear to me.- Mahatma Gandhi
துகாராமும் தமிழ்நாடும்
தமிழ் நாட்டில், ஸம்பிரதாய பஜனை பொதுவாக, ஸ்ரீ துகாராம் மஹாராஜின் அபங்கமான ‘ஸுந்தர தே த்யான உபே விடேவரி’ என்பதைப் பாடி நிறைவு செய்யப்படுகிறது.
300 வருடங்களுக்கு முன், முதன்முதலில், மராட்டி அபங்கங்களின் மஹிமையைத் தமிழ் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் மருதநல்லூர் ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள் ஆவார்கள்.
ஸமீப காலத்தில், பஜன் பாடகர்களான ஸ்ரீ விடோபா நாயக், ஸ்ரீ வெங்கோபா நாயக் ஆகியோர் அபங்கங்கள் பாடப்படும் எல்லையை விரிவு படுத்தினார்கள்.
சுமார் 1935ல் தென்கர்நாடகாவிற்குக் குடிபெயர்ந்த ஸ்ரீ விடோபா நாயக், ஸ்ரீ வாஸுதேவ நாயக் மற்றும் ஸ்ரீ வேங்கோபா நாயக் ஆகியோர், ’அபங்க் பஜன்’ பாடி, அதை தென்னிந்தியா முழுவதும் பரப்பினார்கள்.
ஸ்ரீ வெங்கோபா நாயக் அவர்களால் (1935ல்) மதுரையில் ’ஸேதுராம் பஜன் மண்டலி’ ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீ டி.வி. நாராயண சாஸ்த்திரி மதராஸில் ஒரு பஜன் மண்டலியைத் தொடங்கினார்.
கடந்த நூறு வருடங்களாக திருவண்ணாமலை துகாராம் நிவாஸில் ’துகாராம் பீஜ்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
’ஸுந்தர தே த்யான’ மற்றும் ’பா ரே பாண்டுரங்கா’ என்பவை பாரத ரத்னா ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியால் கச்சேரிகளில் பாடப்பட்ட பிரபலமான அபங்கங்களாகும்.
அவர்காலத்தில் (1930களில்) சரித்திரம் படைத்த வித்வான் முசிரி ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர் ’துகாராம்’ திரைப்படத்தில் துகாராமாக நடித்தார்.
ஸ்ரீமதி கீதாநாரயணஸ்வாமி மஹிபதியின் துகாராம் சரித்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த பக்தி இயக்கத்தில் பெரிதும் பங்கேற்றவர் கவி ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி மஹாராஜ் ஆவர். அவருடைய சீடர் திருநெல்வேலி கடையநல்லூர் ஸ்ரீ துகாராம் கணபதி மஹாராஜ் ’ஹரிகீர்த்தன்’ நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
தற்காலம் அவர் தன் குழுவினருடன் உலகம் முழுவதும் சுற்றி, மராட்டி அபங்கங்களைப் பாடி, தமிழில் அதற்கான அர்த்தத்தையும் விளக்கி வருகிறார்.

ஸ்ரீ பாண்டுரங்க பஜனாஸ்ரமத்தின் தலைவர் விட்டல்தாஸ் ஸ்ரீ ஜயகிருஷ்ண தீக்ஷிதர் தஞ்சாவூர் மாவட்டம் கோவிந்தபுரத்தில் ஒரு விடோபா கோவில் கட்டிவருகிறார்.
இந்தக் கோவிலை பண்டரிபுரத்திலுள்ள விடோபா கோவில் மாதிரியே அமைக்க வேண்டும் என்று தீக்ஷிதர் கருதியுள்ளார்.
கட்டப்பட்டுவரும் இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள இடம் ‘தக்ஷிணபண்டரிபுரம்’ எனப் பெயரிடப்படவுள்ளது.
ஸ்ரீ விட்டல்தாஸின் கருத்துப்படி, மராட்டி அபங்கங்களைத் தமிழ்நாட்டில் பாடும் பாரம்பரியத்தை ஆரம்பித்த பெருமை, 300 ஆண்டுகளுக்கு முன் தேசம் முழுவதும் சுற்றி, மராட்டி அபங்கங்களையும் பஜன்களையும் தமிழ்நாட்டிற்கு அளித்த மருதநல்லூர் ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகளையே சேரும்.
“நாங்கள் ஸ்ரீ ஸத்குருவின் அடிச்சுவடுகளைப் பின் பற்றி, அப்பாரம்பரியத்தைக் காத்து வருகிறோம்” என்று தீக்ஷிதர் கூறுகிறார்.
அவருக்குப் பிடித்தமான ஸந்த் யாரெனக் கேட்டதற்கு, சற்றே சிந்தித்துவிட்டு, “ஒரு துகாராம், ஒரு நாம்தேவ், ஒரு ஏக்நாத் ஆகியோருக்கு இடையில் வித்தியாசம் காண்பது அரிதாகும்.
இருந்தபோதிலும், துகாராம் மஹாராஜின் அபங்கங்களைப் பாடும்போது பக்தியும், ஆனந்தமும் மேலிடுகின்றன என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்” எனச் சொன்னார்.
“ஸந்த் துகாராம் இணையற்றவர். ஏனென்றால், அவர் பெரிய வேதாந்தக் கருத்துகளை, சாமான்ய மனிதனின் பாஷையாக எளிமைப்படுத்தி விட்டார்”, என்பது ஸ்ரீ விட்டல்தாஸின் கருத்து.
ஸந்த்வாணீ
ஸ்ரீ துகாராம் கணபதி மஹாராஜ் அவர்கள் ௧௯௯0ம் ஆண்டு கடையநல்லூரில் (தமிழ்நாடு) விஷ்வ வாரகரி ஸம்ஸ்தானை நிறுவி அதன் அதிகாரியாக இருந்து வருகிறார்.
இந்தியாவிலும் மற்றும் பல வெளிநாடுகளிலும் சென்று, ஹரி கீர்த்தன் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். ஸமஸ்தான், மஹிபதி மஹாராஜின் துகாராம் சரித்திரத்தின் தமிழ் மொழி பெயர்ப்பை வெளியிட்டது. அடுத்ததாக, ௪0 பல்வேறு ஸந்துக்கள் பாடிய ௫௨௨ அபங்கங்கள் அடங்கிய ’ஸந்த்
வாணி’ என்ற நூல் பதிப்பிக்கப் பட்டது. இடது பக்கம் மராட்டி மூலமும், ஹிந்தி அர்த்தமும், வலது பக்கம் தமிழ் எழுத்தில் அதே அபங்கமும், அதன் தமிழ் அர்த்தமும் கொடுக்கப் பட்டிருப்பது அதன் தனிச் சிறப்பாகும். அந்நூலிலுள்ள துகாராம் மஹாராஜின் அபங்கங்கள், (தமிழ்ப் பகுதி) அப்படியே தரப்படுகிறது.
விட்டலனின் சோபை
(௧)
ஸுந்தர தே த்யான உபே விடேவரீ,
கர கடாவரீ டேவூனியா;
துளசீஹார களா காஸே பீதாம்பர,
ஆவடே நிரந்தர ஹேசி த்யான;
மகர குண்டலே தளபதீ ச்ரவணீ,
கண்டீ கௌஸ்துபமணி விராஜித;
துகா ம்ஹணே மாஜே ஹேசி ஸர்வ ஸுக,
பாஹீன ஸ்ரீமுக ஆவடீனே.

பொருள்: துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், "விட்டலன், தியான ஸுந்தரனாக இடுப்பிலே கைகளை வைத்துக்கொண்டு, செங்கல் மீது நிற்கிறான். கழுத்தில் துளஸி ஹாரமும். இடையில் பீதாம்பரமும் அணிந்திருக்கிறான். அவனுடைய இந்த தியானம் எனக்கு நிரந்தரமான பிரியத்தை அளிக்கிறது. காதுகளில் மகரகுண்டலங்கள் மின்னுகின்றன. கழுத்தில் கௌஸ்துபமணி விளங்குகிறது. பிரேமையுடன் அவனுடைய ஸ்ரீமுகத்தை தரிசிப்பேன். இதுவே எனக்கு ஸர்வ ஸுகமாகும்".
மஹாராஜின் அவதார நோக்கம்
தர்மாசே பாளண,
கரணே பாகண்ட கண்டண;
ஹேசி ஆ(ம்)ஹா கரணே காம,
பீஜ வாடவாவே நாம;
தீக்ஷ்ண உத்தரே,
ஹாதீ கேவூனி பாண பிரே;
நாஹீ பீட பார,
துகா ம்ஹணே ஸானா தோரா.
பொருள்: துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், "நான் செய்ய வேண்டிய காரியங்கள் - (பாகவத) தர்மத்தைப் பரிபாலிக்க வேண்டும். (அதற்கு எதிரான) பாஷண்ட மதங்களைக் கண்டனம் செய்ய வேண்டும். (பாகவத தர்மத்தின்) விதையான நாம ஸங்கீர்த்தன மார்கத்தை பிரசாரம் செய்து, வளர்க்க வேண்டும். (பாஷண்டிகளின் கேள்விகளுக்குச் சரியான) பதில் என்ற கூர்மையான அம்பைக் கையில் வைத்துக் கொண்டு சுற்ற வேண்டும். "(கேள்வி கேட்பவன்) கௌரவமானவன், அதிகாரம் படைத்தவன், சிறியவன், பெரியவன் என்று நான் பார்க்க மாட்டேன்".
குருவிடமிருந்து உபதேசம்.
ஸத்குருராயே க்ருபா மஜ கேலீ,
பரி நாஹீ கடலீ ஸேவா கா(ம்)ஹீ;
ஸாம்படவிலே வாடே ஜாதா கங்கா ஸ்நானா,
மஸ்தகீ தோ ஜாணா டேவிலா கர;
போஜன மாகதீ தூப பாவ சேர,
படிலா விஸர ஸ்வப்னா மாஜீ;
கா(ம்)ஹீ களே அந்தராய,
ம்ஹணோனியா காய த்வரா ஜாலீ;
ராகவசைதன்ய கேசவசைதன்ய,
ஸாங்கிதலீ கூண மாளிகேசீ;
பாபாஜீ ஆபலே ஸாங்கீதலே நாம,
மந்த்ர திலா ராம்க்ருஷ்ணஹரி;
மாக சுத்த தசமீ பாஹூனீ குருவார,
கேலா அங்கீகார துகா ம்ஹணே.
பொருள்: துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், "ஸத்குருராயன் எனக்கு கிருபை செய்தார். ஆனால், நான் அவருக்கு எந்த ஸேவையும் செய்யவில்லை. (ஸ்வப்பனத்தில்) கங்கா ஸ்நானத்திற்குப் போகும்போது வழியில் அவரைக் கண்டேன். கையை என் சிரஸில் வைத்தார். போஜனத்திற்காக கால் சேர் (சுமார் ௧00 கிராம்) நெய் கேட்டார். அது ஸ்வப்பனத்தில் மறந்துவிட்டது. இடையில் என்ன தடை, அவசரம் ஏற்பட்டது என்பது எதுவும் தெரியவில்லை. ராகவ சைதன்யர், கேசவ சைதன்யர் என்று குரு பரம்பரையின் ரஹஸ்யத்தை எனக்குச் சொன்னார். தன்னுடைய பெயர் பாபாஜி என்றும் கூறினார். "ராம்க்ருஷ்ணஹரி" என்ற மந்திரத்தை உபதேசித்தார். எனக்கு குருவின் அங்கீகாரம் கிடைத்த தினம் மாசி மாஸம், சுக்ல பக்ஷ, தசமி கூடிய, வியாழக் கிழமையாகும்". (உபதேசம் கிடைத்த இடம் ஓதூர் என்ற கிராமம். வருஷம் - ௧௬௩௨).
அடுத்த அபங்கம்
மேலும் அபங்கங்கள் வெளியிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
ஸ்ரீ துகாராம் மஹாராஜின் சரித்திரச் சுருக்கம்
மராட்டியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்: ஸ்ரீ. சாஸ்தாகோபால்.
"யே து தர்ம்யாம்ருதமிதம்" கீதை, ௧௨-௨0.
"தே ஹே கோஷ்டீ ரம்ய, அம்ருததாராதர்ம்ய,
கரிதீ ப்ரதீதி கம்ய, ஐகோனி ஜே". ஞானதேவீ, ௧௨-௨௩0.
தெய்வத்தின் சரித்திரங்களை ’பரமாம்ருதம்’ என்றும், பக்தர்களின் சரித்திரங்களை ’தர்மாம்ருதம்’ என்றும் கூறுவார்கள். தெய்வத்தின் சரித்திரங்களை ஸந்துக்கள் பாடினர்கள். நம்போன்றோர் ஸந்துக்களின் சரித்திரங்களைப் பாடியிருந்தாலும், அது கடினமான காரியமே. காரணம், ஸந்துக்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித் தெரிவதில்லை; எப்படித் தெரிகிறார்களோ அப்படி இருப்பதில்லை. இருந்தாலும், நமது படைப்புகள் அவர்களுக்கு மரியாதை அளிப்பதாகவே இருக்கும்.
"ஆமுதே(ம்) கராவயா கோடீ, தே ஜாலிச நாஹீ வாக்ஸ்ருஷ்டி".
ஆ(ம்)ஹாலாகீ திடீ தே(ம்) திடீச நோஹே" (அம்ருதானுபவ்).
அதைப்பற்றி நாம் அவர்களிடம், "நீங்கள் யார்? எதைச் சேர்ந்தவர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? உங்களுடைய பெயர் என்ன? உருவமென்ன?", என்று கேட்டால் எதுவுமில்லை என்ற பதிலே கிடைக்கும்.
"கா(ம்)ஹீ(ம்)ச மீ நவ்ஹே கோணியே(ம்) கா(ம்)வீ(ம்)சா. யேகடு டாயீ(ம்)ச்யா டாயீ(ம்) ஏகு. (௧) நாஹீ(ம்) ஜாத கோடே(ம்) யேத பிரோனியா, அவகேசி வாயா(ம்)வீண போல. (௨) துகா ம்ஹணே நா(ம்)வ ரூப நாஹீ(ம்) ஆ(ம்)ஹா, வேகளா த்யா கர்மா அகர்மாசீ". (௩)
இந்தக் நிலைமையில், நான் ஸந்த ஸ்ரேஷ்ட ஸ்ரீ துகாராம் மஹாராஜின் மஹத்வமுள்ள சரித்திரத்தைச் சுருக்கமாக அளிக்க முயற்சிக்கிறேன்.
பிறப்பும், முன்னோர்களும்
"தன்ய தேஹுகாவ புண்யபூமி டாவ, தேதே(ம்) நாந்தே தேவ பாண்டுரங்க".
ஸ்ரீதுகாராம் மஹாராஜின் ஜன்மபூமியாகவும், கர்மபூமியாகவும் இருக்கும் தேஹுகாவ் உண்மையிலேயே ஒரு புண்ணிய பூமியாகும். தேஹு கிராமத்தில் பிரத்தியக்ஷமாக பாண்டுரங்க தெய்வம் வசிப்பதால், தன்யத்வமும், புண்யத்துவமும் அங்கே வந்துவிட்டன. இது விழிப்புடன் இருக்கும் ஸ்தலமாகும்.
இந்திராயணி நதியின் ஸௌந்தர்யமான தீரத்தில், பாண்டுரங்க பகவானின் தேவாலயம் உள்ளது. இங்கே ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்தவன், இடுப்பில் கைகளை ஊன்றி நிற்கிறான், இடது புறம் மாதா ரகுமாயியும் இருக்கிறாள். எதிரில் அஸ்வத்த மரம் இருக்கிறது. பக்கத்தில் கைகளைக் கூப்பிக்கொண்டு கருடன் நிற்கிறான். நுழைவாயிலில் விக்னராஜரும், வெளிப் புறத்தில் பைரவரும், ஹனுமானும் உள்ளனர். தென்பக்கத்தில் ஹரேஸ்வரரின் தேவாலயமும், அருகே பல்லாள வனத்தில் ஸித்தேஸ்வரர் அதிஷ்டானமும் இருக்கின்றன. இந்த க்ஷேத்திரவாசிகள், வாயால் பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கும் தன்யர்கள், தெய்வவான்கள். இது துகாராம் மஹாராஜின் காலத்தில் இருந்த தேஹுகாவின் வர்ணனையாகும்.
ஸ்ரீ துகாராம் மஹாராஜ் காலத்திற்கு சுமார் 300 வருஷங்களுக்கு முன்னர், அவருடைய முன்னோர் விஸ்வம்பரபாபா, இந்த தேஹு கிராமத்தில் வசித்து வந்தார். இவர்களுடைய குடும்பத்திற்கு விடோபாவே குலதெய்வம். விஸ்வம்பரபாபாவின் வீட்டில் தந்தைக்குப்பின் தமையன் என்ற முறையில் (வழிவழியாக) எல்லோரும் ஆஷாடி, கார்த்திகி வாரி யாத்திரை போவது வழக்கம். பண்டரி வாரி யாத்திரையை வழிவழியாக, நியமமாக கைகொண்டு வரும் விஸ்வம்பரபாபாவின் அசஞ்சலமான பக்தியின் காரணமாக, அவரருகில் ஸேவை சாதிப்பதற்காக, புண்டலீகன் அருகில் ஸேவை சாதிப்பதற்காக வைகுண்டத்தை விட்டுவிட்டு வந்ததைப் போல, பகவான் பண்டரிபுரத்தை விட்டு தேஹுவிற்கு ஓடி வந்துவிட்டான்.
"புண்டலிகா(ம்)சே நிகட ஸேவே(ம்), கைஸா தா(ம்)வே பராடீ". (௧)
"மூள புருஷ விஸ்வம்பர, விட்டலாசா பக்த தோர, (௧)
த்யாசே பக்தினே பண்டரீ, ஸாண்டூனீ ஆலே தேஹு ஹரீ". (௨)
ஆஷாட சுக்ல பக்ஷ தசமியன்று, பகவான், விஸ்வம்பரபாபாவின் கனவில் தோன்றி, "நான் உனது கிராமத்திற்கு வந்துள்ளேன்", என்று கூறி, அங்குள்ள ஒரு மாந்தோப்பில் சென்று, நித்திரை கொண்டான். காலையில், விஸ்வம்பரபாபா கிராமவாசிகளுடன் மாந்தோப்பிற்குச் சென்றார். அங்கு அவருக்கு விட்டல், ரகுமாயியின் ஸ்வயம்பு மூர்த்திகள் கிடைத்தன. பாபா தனது வீட்டில் இருந்த பூஜாக்ருஹத்தில், மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார். பஞ்சக்ரோசத்திற்குள் (10/12 கி.மீ சுற்றளவுக்குள்) இருக்கும் ஜனங்கள் தரிசனத்திற்கு வர ஆரம்பித்தார்கள். பகவானுக்கு பிரதி வருஷமும் மஹோத்ஸவங்கள் நடக்க ஆரம்பித்தன. மஹோத்ஸவ சிலவுகளுக்காக ஒரு நிலம் அவருக்கு இனாமாக கொடுக்கப்பட்டது. சுக்ல பக்ஷ ஏகாதசிகளில் யாத்ரீகர்கள் வர ஆரம்பித்தார்கள்.
விஸ்வம்பரபாபாவின் காலத்திற்குப்பின் அவருடைய புத்திரர்கள் ஹரியும், முகுந்தும் பகவானின் ஸேவையை விட்டுவிட்டு, போர் செய்யும் தொழிலில் ஈடுபட்டார்கள். குடும்பத்துடன் ராஜாவின் ஆதரவில் வாழச் சென்றுவிட்டனர். அங்கே அவர்கள் ஸைன்யத்தின் அதிகாரிகளாகப் பணியேற்றனர். அவர்களுடைய இந்தச் செய்கை, அவர்களது தாயார் ஆமாபாயிக்கு சரியாகப் படவில்லை; தெய்வத்திற்கும் அது பிடிக்கவில்லை. ஒரு நாள் பகவான், ஆமாபாயின் கனவில் தோன்றி, "நான் உங்களுக்காக பண்டரிபுரத்தை விட்டுவிட்டு, தேஹுவிற்கு வந்தேன். ஆனால், நீங்கள் என்னை விட்டுவிட்டு, இங்கே ராஜவிடம் ஸேவை செய்ய வந்தது சரியல்ல. நீங்கள் தேஹுவிற்கே போய்விடுங்கள்", என்று கூறினான். ஆமாபாயீ கனவில் கண்ட விஷயங்களைப் பிள்ளைகளிடம் சொல்லி, தேஹுவிற்கே திரும்பிப் போய் விடுவது நல்லதென்று கூறினாள். ஆனால், பிள்ளைகள் அதை லக்ஷ்யம் செய்யவில்லை. அதற்குப்பின், உடனே, ராஜ்யத்தின் மீது எதிரிகளின் படையெடுப்பு நடந்தது. இரு ஸஹோதரர்களும் போர்க்களத்தில் எதிரிகளிடம் சண்டையிட்டு மாந்தார்கள். முகுந்தனின் பத்னி உடன்கட்டை ஏறினாள். ஹரியின் பத்னி கர்ப்பவதியாக இருந்தாள். ஆமாபாயி அவளைக் கூட்டிக்கொண்டு தேஹுவிற்கு வந்தாள். மருமகளைப் பிரஸவத்திற்காகப் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு, விட்டலனின் ஸேவையில் ஈடுபட்டாள். ஹரியின் பத்னிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விட்டல் என்று பெயரிட்டார்கள். விட்டலனின் புத்திரன் பதாஜி, பதாஜிக்கு சங்கரன், சங்கரனுக்கு கான்ஹோபா, கான்ஹோபாவிற்கு போல்ஹோபா. போல்ஹோபாவிற்கு மூன்று புதல்வர்கள். மூத்தவன் ஸாவ்ஜீ, மத்தியில் துகாராம், கடைசியில் கான்ஹோபாராய்.
ஸ்ரீ துகாராம் மஹாராஜ் அவதரித்த குலம் பவித்ரமானது.
"பவித்ர தே குள பாவன தோ தேச, ஜேதே ஹரீசா தாஸ ஜன்ம கேதி". (௧)
முன்னோர்கள் யுத்தகளத்தில் விரோதிகளிடம் போர் புரிந்து உயிர் நீத்த அந்தக்குலம் க்ஷத்ரிய குலமாகும். அந்தப் பரம்பரை நல்ல நாகரீகம் உள்ளது, தார்மீகமானது. வம்ச வழிவழியாக ஸ்ரீ விட்டலனின் உபாசனை நிகழ்ந்து வரும், மற்றும் வாரி யாத்திரை செய்யும் குடும்பமாகும். விவசாயம், கொடுக்கல்-வாங்கல், வியாபாரம் செய்து வருவதுமான குடும்பம். குடியிருப்பதற்கு ஒன்றும், வியாபாரத்தைக் கவனிக்க சந்தைப் பேட்டையில் ஒன்றுமாக, இரண்டு வீடுகள் இருந்தன. கிராமத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. சுற்றுப்புறங்களில் செல்வாக்கு இருந்தது. விவசாயம் செய்பவர்களை ’குணபி’ (விவசாயி) என்பார்கள். வியாபாரம் செய்பவர்களை ’வாணி’ (வியாபாரி) என்பார்கள். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு, ஸ்ரீ துகாராம் மஹாராஜை ’கோஸாவி’ எனக் கூப்பிட்டார்கள்.
கோஸாவீ என்பது ஒருபொழுதும் இந்தக் குலத்தின் குடும்பப் பெயராக இருந்ததில்லை. குடும்பப் பெயர் ’மோரே’ என்பதாகும். [இந்த்ரியாசே தனீ ஆ(ம்)ஹீ ஜாலோ கோஸாவீ] என்றபடி அது ஒரு (புலன்களை அடக்கிய) நிலை. பகவத்கீதையின் காலத்தில், வைசியர்களையும் சூத்திர ஜாதியில் சேர்த்துவிட்டனர்.
"ஸ்த்ரியோ வைஸ்யாஸ்ததா சூத்ராஸ்தேபி யாந்தி - பராம் கதீம்" - கீதை, ௯-௩௨.
ஞானதேவ் மஹாராஜின் காலத்தில் க்ஷத்திரியர்களும் சூத்திரர்களாகக் கருதப் பட்டனர்.
"தைஸே க்ஷத்ரீ வைஸ்ய ஸ்த்ரியா,
கா(ம்) சூத்ர அந்த்யஜாதி இயா" -ஞானதேவீ, ௯-௪௬0.
பிராமணன், சூத்திரன் என்ற இரண்டு
ஜாதிகளே மிஞ்சின. ஆகவே,
துகாராம் மஹாராஜும் சூத்திரர் என்று அழைக்கப் பட்டார்.
அரசியல், தார்மீக மற்றும் சமூக ஸ்திதி
துகாராம் மஹாராஜின் காலத்தில், (மஹாராஷ்ட்ராவிற்குத்) தெற்கில் முஸல்மான்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது, மற்றும் போர்த்துகீசியரும் கோவாவில் இருந்தனர். பீஜாப்பூர் அடில்ஷா, அஹமத்நகர் நிஜாம்ஷாஹி, கோல்கோண்டா குதுப்ஷாஹி ஆகிய மூன்று முஸல்மான் ராஜாக்களும் தங்களுக்குள் சண்டையிட்ட வண்ணம் இருந்தனர். அதனால், கிராமங்கள் பாழடைந்துகொண்டு வந்தன, கொள்ளைகள் நடந்தன, ராஜாக்களோ கேளிக்கைகளில் மட்டும் நாட்டம் உடையவர்களாக இருந்தனர், பிரஜைகள் மிகவும் துன்பம் அடந்தனர். மஹாராஜே, "பிராமணர்கள் தங்களுடைய ஆசாரங்களை விட்டுவிட்டனர், க்ஷத்திரியர்கள் வைசியர்களைக் கொள்ளை அடிக்கிறார்கள். பலவந்தமாக மத மாற்றம் செய்யப் படுகிறது" என்று கூறியுள்ளார்.
"ஸாண்டிலே ஆசார,
த்விஜ சாஹாட ஜாலே சோர.
ராஜா ப்ரஜா பிடீ,
க்ஷத்ரீ வைஸ்ய யாசீ நாடீ".
வைசியர் மற்றும் சூத்திரர்களைப் பற்றி சொல்லும்படி ஒன்றும் இல்லை. தர்மத்திற்குக் குறைவு ஏற்பட்டது. அதர்மம் மிகுந்தது.
"ஐஸே அதர்மாசே பள,
தர்ம லோபலா ஸகள". (௧)
மக்கள் அதர்மத்தையே தர்மம் எனக் கருதினார்கள். ஸந்துக்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது.
"ஸந்தா(ம்) நாஹீ மான,
தேவ மானீ முஸல்மான்". (௧)
சமூகம் நானவிதமான தெய்வங்களைத் தொழுதுகொண்டு, சிதறுண்டு போயிற்று; தர்மத்தின் மீது பற்றில்லாமல், அஞ்ஞானத்தின் இருளில் மூழ்கிற்று. ஜனங்கள் பிரகாசம் அளிக்கும் ஸூர்யனின் உதயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த சமயத்தில், தேஹு கிராமத்தில், ஒரு சித்ஸூர்யன் உதயமாயிற்று.
"ஸந்தக்ருஹ மேளீ,
ஜகத் அந்த்யா கிளீ,
பைல உதயாசளீ,
பானு துகா". (௩) (ராமேஸ்வர பட்டின் அபங்கம்).
மஹான் பாகவத்பக்த போல்ஹோபா, மாதா கனகாயீ ஆகியோரின் திருவயிற்றில் சக வருஷம் ௧௫௩0 மத்தியில் (கி.பி. ௧௬0௯), ஸ்ரீ துகாராம் மஹாராஜ் அவதரித்தார். செல்வாக்குள்ள குடும்பமாக இருந்ததினால், இளமைப் பருவம் பெரும் குதூஹலத்துடனும், விளையாட்டிலும் கழிந்தது. கிராமத்து உபாத்தியாயர்களிடம் இளமைக் கல்வி கற்றார். உபாத்தியாயர்கள் பிள்ளைகளுக்கு, தங்களுடைய கையில் சிலேட்டுப் பலகையைப் பிடித்துக்கொண்டு, பிள்ளைகளின் கையைப் பிடித்து, எழுதுவதற்குக் கற்பித்தார்கள்.
"அர்பகாசே ஸாடீ,
பந்த ஹாதே தரிலீ பாடீ." (௧)
முலே(ம்) கடே மாண்டூன் முளாக்ஷரே காடீத,
ஓனாம்யாச்யா காளே,
கடே மண்டியேலே பாளே". (௧)
தந்தை போல்ஹோபா, மஹாராஜுக்கு, நடைமுறை மற்றும் பரமார்த்திகத்தைப் பற்றிய கல்வியைப் போதித்தார். மூத்த ஸஹோதரர் ஸாவ்ஜீக்கு வியாபாரம், தொழில் செய்வதில் நாட்டாமில்லாத காரணத்தினால், தந்தையார் ஸ்ரீ துகாராம் மஹாராஜிடம், தொழில், வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளும்படிச் சொன்னார்.
சந்தைப்பேட்டையில் வியாபாரத்தைக் கவனிப்பத்ற்காக வைத்திருந்த வீட்டில், தந்தையாரின் மேற்பார்வையில் தொடர்ந்து வேலை செய்து, வியாபாரத்தின் நுணுக்கங்களை அறிந்துகொண்டார். தன்னுடைய ௧௩வது வயதில், மஹராஜிற்கு கழுத்தில் ஸம்சாரச் சுமையைத் தாங்க வேண்டியதாயிற்று (திருமணம் நிகழ்ந்தது). உடனே, அவரும் தனியாக வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார். கொடுக்கல்-வாங்கல், வியாபாரம் ஆகியவற்றை நன்றாக நடத்தி வந்தார். எல்லா ஜனங்களும் அவரை புகழ்ந்து கொண்டாட ஆரம்பித்தார்கள். குடியிருக்கும் வீட்டில் ப்ரகாசமான, ஸாத்வீகமான சூழ்நிலை நிலவியது. சந்தைப்பேட்டையில் உள்ள வீட்டில் வியாபாரம் பெருகியது. மூன்று ஸஹோதரர்களுக்கும் விவாஹம் நடந்தேறியது. மஹாராஜின் முதல் மனைவி தொடந்து ஆஸ்த்துமா நோயால் பீடிக்கப்பட்டிருந்ததால், அவருக்கு புனேயில் இருந்த பிரசித்தி பெற்ற, லேவாதேவி செய்யும் வியாபாரி ஆப்பாஜி குள்வே என்பவரின் புதல்வியான கன்னிகை ஸௌபாக்கியவதி ஜீஜாபாய் என்ற ஆவளியை இரண்டாவதாக விவாஹம் செய்து வைத்தனர். இது, ஒரு ஐஸ்வர்யமுள்ள குடும்பம், மற்றொரு ஐஸ்வர்யமுள்ள குடும்பத்துடன் சம்பந்தம் செய்துகொண்டதாகும். இந்த ஐஸ்வர்யமான இணைப்பினால், வீட்டில் தன-தான்யங்கள் நிறம்பியிருந்தன. தாய்-தந்தையர், மற்றும் ஸஜ்ஜனங்கள், பந்துக்கள் பிரேமையுடன் இருந்தனர். சரீரம் ஆரோக்கியத்துடன் இருந்தது. எதனுடையவும், எந்தவிதமான குறையும் இல்லாதிருந்தது.
"மாதா பிதா பந்து ஸஜ்ஜன,
கரீ(ம்) உதண்ட தன தான்ய,
சரிரீ ஆரோக்ய லோகாந்த மான,
ஏகஹி உணே அஸேனா". - துகாராம் சரித்ரம், மஹிபதிபாபா.
இப்படிப்பட்ட ஸுகமான, ஸமாதானமான, ஐஸ்வர்யமான நாட்கள் எவ்வளோ கழிந்தன. எப்படிக் கழிந்தது என்று கொஞ்சம்கூடப் புரியவில்லை. இதன்பின்னர், ஸுகத்திற்குப்பின் துக்கம் வந்தது. இனி, வருங்காலம் ஆரம்பமாயிற்று.
வாத்ஸல்யமுள்ள பெற்றோர்களின் மறைவு
(மஹாராஜின்) ௧௭வது வயதில், பிரியமாகவும், ஆசானாகவும் இருந்த, தந்தை போல்ஹோபா காலமானார். துகாராம் மஹாராஜ் அந்த மிராசின் வாரீசுதாரர் ஆனார்.
"பாப கரீ ஜோடீ லேகராசே ஓடீ,
ஆபலீ கரவண்டீ வாளவோனீ, (௧)
ஏகாஏகீ(ம்) கேலா மிராசீசா தனீ,
கடீயே வாஹுனி பார காந்தீ". (௨)
மிராசீ = தொழில்-வியாபாரமும், பகவானின் ஸேவையும்
எவரை ஸம்ஸார தாபங்கள் பொசுக்குவதில்லையோ, அவர்களே வென்றவர்கள்.
"பாப மேலா ந களதா,
நவ்ஹதீ ஸம்ஸாராசீ சிந்தா". (௧)
(தந்தை காலமானதால்), மஹாராஜிற்கு தாங்க முடியாத துக்கம் ஏற்பட்டது. இந்தத் துக்கம் ஏதோ கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து வரும்போது, மறு வருஷம், பிரியமான மாதா கனகாயியும், மஹாராஜ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, காலமானார்.
"மாதா மேலீ மஜ தேகதா". (௧)
மஹாராஜிற்கு, துக்கம் என்ற மலை இடிந்து, மேலே விழுந்தது போலாயிற்று. மாதா, மஹாராஜிற்காக என்னவெல்லாம் செய்யவில்லை? எல்லாம் செய்தாள்.
"காய நாஹீ(ம்) மாதா கௌரவீத பாளா,
காய நாஹீ(ம்) லளா பாளீத தீ". (௧)
"காய நாஹீ(ம்) த்யாசீ கரீதே ஸேவா,
காய நாஹீ(ம்) ஜீவா கோமடேதே". (௨)
"அமங்களபணே காண்டாளா ந தரீ,
உசலோனி கரீ தரீ கண்டீ". (௩)
இதன்பின், (மஹாராஜின்) ௧௮ வது வயதில், மூத்த ஸஹோதரர் ஸாவ்ஜீயின் பத்னி காலமானாள். ஆதியிலிருந்தே ஸாவ்ஜிக்கு உலகப் பற்று இருந்தது கிடையாது. அவர், பத்னியின் மறைவிற்குப் பின்னர், வீட்டுப் பொறுப்பை விட்டுவிட்டு, தீர்த்த யாத்ரை போனார்; போனவர் போனவர்தான். குடும்பத்தின் நான்கு உறுப்பினர்கள் போய் விட்டார்கள். இதனால், ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்த மஹாராஜிற்கு, இப்போது எல்லாமே போய்விட்டது போலாயிற்று.
மஹாராஜ் தன்னுடைய தன்னம்பிக்கையைக் குறைவடைய விடவில்லை. உதாஸீனத்துடன் இருந்தாலும், தனது ௨0 வது வயதில், ப்ரபஞ்சத்தை எதிர்நோக்கும் நம்பிக்கையைக் கைக்கொண்டார். இருந்தும் என்ன ஆயிற்று? ௨௧ வது வயதில், விபரீதமானா காலம் வந்துற்றது. நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அது மிகப் பயங்கரமாக இருந்தது. கி.பி. ௧௬௨௯ (சக வருஷம் ௧௫௫0-௫௧) மழை பெய்ய காலம் தாழ்ந்தது. அதன்பின் மிகவும் பெருமழை பெய்தது. இப்போதும் ஜனங்களுக்கு (நற்காலம் பிறக்கும் என்ற) நம்பிக்கை இருந்தது. கி.பி ௧௬௩0 வது வருஷத்தில் வறட்சி ஏற்பட்டது. எல்லோரும் அவதியுற்றனர். தான்யங்களின் விலை கடகடவென உயர்ந்தது. தீவனம் இல்லாமல் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மரித்தன. அன்னமில்லாமல் ஆயிரக்கணக்கான ஜனங்கள் இறந்தார்கள். பெரிய குடும்பங்கள் மண்ணோடு மண்ணாயின. இதுவரை இம்மாதியான துர்தசை வந்ததில்லை.
கி.பி.௧௬௩௧ மத்தியில் இந்த எதிர்பாராத ஆபத்து நேர்ந்தது. பெரும் மழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர சேதம் உண்டுபண்ணியது. இவ்விதமான எதிர்பாராத ஆபத்தினால் ஏற்பட்ட கெட்டகாலம் மூன்று வருஷம் நீடித்தது. அதன்பின் பயங்கரமான தொற்றுநோய்கள் பரவின. விலவாசிகள் உயர்ந்தன. நான்கு சேர் ரத்தினம் கொடுத்தாலும், நான்கு சேர் உளுந்து கிடைக்காது. பஞ்சத்தின் கடுமையால் ஏற்பட்ட இந்த மோசமான விளைவுகளைப் பற்றி மஹிபதிபாபா கூறுகிறார்:
"பர்ஜன்ய நி:சேஷ கேலா தேணே(ம்),
சார்யாவீண பைல மேலே". (௧)
"மஹாகாள படீலா பூர்ண,
ஜாஹாலீ தாரண சேராசீ,
தே ஹீ ந மிளே கோணா ப்ரதீ,
ப்ராணீ ம்ருத்யுஸதனீ(ம்) ஜாதீ". (௨)
"துஷ்காளே(ம்) ஆடிலே த்ரவ்ய மான".
இந்தப் பஞ்சத்தினால் மஹாராஜின் உலகம், முழுவதுமாக அழிந்தது. பசுக்களும் எருமைகளும் இறந்தன. கொடுக்கல்-வாங்கல் தொழில் மூழ்கிப் போயிற்று. வியாபாரம் படுத்துவிட்டது. மக்கள் மத்தியில் இருந்த மதிப்பும் போய்விட்டது. மூத்த மனைவி ரகுமாபாயியையும், ஒரே செல்லப் பிள்ளையுமான ஸந்தோபாவையும் பஞ்சம் பலி கொண்டது. வியாபாரிகளும், வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களும் பஞ்சகாலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொள்வது கண்கூடு. செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, லாபம் சம்பாதிக்கும் கெட்ட புத்தி உள்ளவர்களை இப்போதும் நாம் காணலாம்.
பஞ்சகாலத்தில், மக்களிடமிருந்து (கடன் கொடுத்த பணத்தை) வசூல் செய்யும் கடினமான இதயம் துகாராம் மஹாரஜிற்கு இல்லை. மாறாக, தன்னுடைய மோசமான நிலமை, ஆபத்து, துக்கம் ஆகியவற்றை மறந்து, ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டுத் துன்புறும் ஜனங்களுக்கு தாராளமாக உதவி செய்தார்.
"ஸஹஜ ஸரலே ஹோதே கா(ம்)ஹீ(ம்),
த்ரவ்ய தோடேபஹு தேஹீ,
- - - திலே(ம்) த்விஜா யாசகா". (௪)
இருப்பதில், ஏதாவது கொஞ்சம் பணத்தை எதுத்துக்கொண்டு சுற்றப் போவார். அதை பிராமணர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தாராளமாகக் கொடுத்துவிடுவார். (இந்த ஸம்பவங்களால், துகாராம் மஹாராஜ் தன்னை திவாலாக்கிக் கொண்டார் என எண்ணக் கூடாது).
ஸாக்ஷாத்காரம் கிடைத்தது
"ஸம்ஸாராச்யா நா(ம்)வே காலோனியா சூன்ய,
வாடதா ஹா புண்யதர்ம கேலா". (௯)
குடும்பத்தினரான தாய், தந்தை, புத்ரன், மனைவி ஆகியோரின் மறைவு, பஞ்சத்தினால் உலகில் ஏற்பட்ட சூழ்நிலை, ஜனங்களுக்கு உண்டான துன்பம், உற்றார் உறவினர்களுக்கு உண்டான நிந்தையும், வருத்தமும் ஆகிய ஸர்வ துயரங்களையும் துகாராம் மஹாராஜின் தைரியம் தகர்த்துவிட்டது. இந்தத் துர்தசையிலும், அவர் அவற்றை எதிர்கொண்டார், ஓடிப் போகவில்லை. அவர் ஓடிப்போகும் வர்கத்தைச் சேர்ந்தவரல்ல. அவர் ஸம்ஸாரத்தை ஜயித்தவர். ஸாரமற்றதிலிருந்து ஸாரத்த எடுத்துக் கொள்பவர். இந்த யுத்த பூமியில், அவர் புறமுதுகிடவில்லை. பஞ்ச காலத்திலும், எதிர்பாராத ஆபத்துகள் நேர்ந்தபோதும், மனித தேஹம், தேஹ ஸம்பந்தமான விஷயங்கள் - தாய், தந்தை, புத்ரர், ஸம்பத்து ஆகியவைகளின் மதிப்பைக் கணக்கிட்டார். நிலையற்றது என்ற மறைப்பும் இருந்தது. அப்போது, நிலையாக உள்ளதின் மதிப்பைத் தேடிப் பார்க்க ஆரம்பித்தார். "நம்முடைய உத்வேகத்தை எப்படிக் கடப்பது? அக்கரைக்கு எவ்வாறு செல்வது?" என்று ஆலோசிக்க ஆரம்பித்தார்.
"விசாரலே ஆதீ ஆபுலே மானஸீ,
வாசோ யேதே(ம்) கைஸீ கோண்யாபரீ". (௧)
அவர், ஸத்யத்தைக் கண்டறியும் நிச்சயத்துடன், பாமநாத பர்வதத்திற்குச் சென்றார். (அங்கே) அவருக்கு நிரந்தரமான ஸத்யம் ஸாக்ஷாத்காரம் ஆயிற்று. அதன்பின் அந்த நிலையினின்றும் திரும்புவது என்பது கிடையவே கிடையாது. அதுவே ’நிர்வாணம்’ எனப்படுகிறது. மஹாராஜின் தேஹத்தில் எறும்பு, தேள், பாம்பு முதலியவைகள் ஏறின. அவைகள் அங்கேயே தூங்கி, மஹாராஜிற்குத் துன்பம் விளைவித்தன. புலியும் (அருகில்) அசைந்துகொண்டு நின்றது. ஆனால், மஹாராஜின் நிச்சயம் தளரவில்லை. ௧௫ வது தினம், அவருக்கு ஸத்யத்தின் ஸாக்ஷாத்காரம் கிடைத்தது.
"பாமகிரீ பாடாரீ வஸதீ ஜாண கேலீ,
வ்ருத்தி ஸ்திராவலீ பரப்ரஹ்மீ(ம்)". (௧)
"ஸர்ப வி(ம்)சு வ்யாக்ர அங்காசீ ஜோ(ம்)பலே(ம்),
பிடூ(ம்) ஜே லாகலே ஸகளீக". (௨)
"பந்தரா திவஸாமாஜீ ஸாக்ஷாத்கார ஜாலா,
விடோபா பேடலா நிராகார". (௩)
நிராகார பரமாத்மா காக்ஷியளித்தான். பகவான் பக்தனுக்கு ’சிரஞ்ஜீவ பவ’ என்று ஆசீர்வாதம் செய்தான், ஊக்கமும் அளித்தான்.
"த(ம்)வ ஸாஹ்ய ஜாலா நிவாஸீ(ம்),
புத்தி திலீ ஐசீ நாச நாஹீ(ம்)". (௨)
மஹாராஜ் வீட்டை விட்டுப் போனதிலிருந்து, அவருடய கடைசித் தம்பி கான்ஹோபா கிராமத்தின் சுற்றுப் புறங்களிலுள்ள மலைகள், குளம்-குட்டைகள், வனங்கள் ஆகிய இடங்களில் நன்றாகத் தேடிப் பார்த்தார். தேடிக்கொண்டே, பாமநாத பர்வதத்தின் குஹைக்குள் சென்று பார்த்தபோது, மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார். அவருக்கு, அங்கே என்ன காக்ஷி தெரிந்தது? துகாராம் மஹாராஜின் சரீரத்தின் மீது எறும்பு, பாம்பு, தேள் ஆகியவை இருந்தன. அது பரமாத்மா வெளிப்பட்ட பொன்னான நாளாகும். கான்ஹோபாவின் கண்களுக்கு விருந்து கிடைத்தது. ஜன்மா அர்த்தமுள்ளதாயிற்று. இரு ஸஹோதரர்களும் தழுவிக் கொண்டார்கள். துகோபாராய்க்கு பகவான் தரிசனம் கொடுத்த அந்த பவித்ரமான இடத்தில், புனிதமும், ஞாபகமும் சாஸ்வதமாக இருப்பதற்காக, அங்கே சில கற்களைப் பரப்பி வைத்தார். அந்த பவித்ர பூமியை வந்தனம் செய்துவிட்டு, இரு ஸஹோதரர்களும் அங்கிருந்து புறப்பட்டு, நேராக இந்த்ராயணி ஸங்கமத்தை அடைந்தார்கள். மஹாராஜ் ஸங்கமத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, ௧௫ நாள் உபவாஸத்தை விட்டார் (போஜனம் செய்தார்).
அப்போது, துகாராம் மஹாராஜ், கான்ஹோபாவிடம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமான கடிதங்களையும், பத்திரங்களையும் (பிராமிஸரி நோட்டுகள்) எடுத்து வரச் சொன்னார். (பணம்) பெற்றுக் கொண்ட ஜனங்களிடமிருந்து எழுதி வாங்கிய அவைகள் (இரண்டாக) பிரிக்கப்பட்டன. பாதிக் காகிதங்களை கான்ஹோபாவிடம் கொடுத்தார். தன் பங்குக்குள்ள பாதிக் காகிதங்களை இந்த்ராயணியின் பிரவாஹத்தில் மூழ்கடித்தார்.
கடன்காரர்களுக்குக் கொடுத்த பணத்தை, பஞ்சகாலத்திற்குப்பின் கொடுத்த பிரகாரம் வசூல் செய்ய வேண்டும். தன்னுடைய பொருளாதார நிலமை சீர்குலைந்து போயிருந்த சமயத்திலும், இந்த லேவாதேவிக்காரர், தன்னுடைய ஐவேஜான காகிதங்களை கங்கார்பணம் செய்துவிட்டு, கடன் வாங்கியவர்களைக் கடனிலிருந்து விடுதலை செய்துவிட்டார். இதன் மூலம், தான் கொடுக்கல்-வாங்கல் தொழிலில் பாராமுகமாகிவிட்டதை (விட்டுவிட்டதை) உலகிற்கு அறிவித்தார். இதையே உண்மையான ஸமாஜ்வாதம் (சோஷலிஸம்) என்று சொல்லுவார்கள்.
"தேவாசே தேவூள ஹோதே ஜே(ம்) பங்கலே(ம்),
சித்தி தே ஆலே கராவே தே". (௧)
பஞ்சகாலத்திற்குப் பின் உலக நடவடிக்கைகளில் ஈடுபடாமல், பகவானின் இடிந்து போயிருந்த கோவிலை ஜீர்ணோத்தாரணம் செய்து, தெய்வத்தை, பரமார்த்தத்தை நோக்கிய ஸ்ரீ துகாராம் மஹாராஜ் தனக்கென்று ஒரு தனி இடத்தப் பிடித்துக்கொண்டார். தந்தை போல்ஹோபாவின் மேற்பார்வையில் வளர்ந்து வந்த கோவில் பழுதுற்றதால், இந்த்ராயணியின் ரம்யமான தீரத்தில் போல்ஹோபாவே, பகவானுக்கு ஒரு ஆலயம் கட்டுவித்து, குடியிருந்த வீட்டின் பூஜாக்ருஹத்தில் இருந்த மூர்த்தியை, இந்த புதிய தேவாலயத்தில் பிரதிஷ்டை செய்தார். துகோபாராயின் காலத்தில் தேவாலயம் பழுது பட்டிருந்தது. அதனால், பஞ்சகாலத்திற்குப் பின்னர், மஹாராஜ் முதலில் தேவாலயத்தை ஜீர்ணோத்தாரணம் செய்தார்.
"ஸ்ரீமூர்தீ(ம்)சே ஹோதே தேவாலய பங்கலே,
பாஹாதா ஸ்புரலே(ம்) சித்தி(ம்) ஐஸே". (௧)
"ம்ஹணே ஹே தேவாலய கராவயாசே ஆதா(ம்),
கராவயா கதா ஜாகரண". (௨)
தேவாலயத்தை ஜீர்ணோத்தாரணம் செய்தாலும், பகவானுக்கு ஆலயம் கட்டினாலும், அங்கே பஜன், கீர்த்தன், கதை, (புண்ய தினங்களில்) விழித்திருத்தல் ஆகியவை செய்யவிட்டால், அதன் புண்யம் கிடைக்காது. (இந்த தேவாலயம் மூலம் எல்லோருக்கும்) ஹரிஜாகரண் (ஏகாதசி இரவுகளில் கண் விழித்தல்), ச்ரவணம், கீர்த்தனம், மனனம், ஸஹஜ ஸாக்ஷாத்காரம், பாண்டுரங்கனின் க்ருபை ஆகியவைகள் கிடைத்தன.
"கா(ம்)ஹீ பாட கேலீ ஸந்தா(ம்)சீ(ம்) உத்தரே(ம்),
விஸ்வாஸே(ம்) ஆதரே(ம்) கரோனியா". (௧)
கீர்த்தன் செய்ய நிற்பதற்குள்ள ஸௌகர்யத்துடன் தேவாலயம் கட்டினார். மஹாராஜ் தினமும் பண்டாரா மலைக்கு ஏகாந்தமாகச் சென்று, படித்து, மனப்பாடம் செய்து, கீர்த்தன் செய்யப் பழகினார். காலையில் ஸ்நானம் செய்து, குலதெய்வம் ஸ்ரீ ரகுமாயி ஸமேத பாண்டுரங்கனுக்கு தன் கைகளால் பூஜை, அர்ச்சனைகள் செய்துவிட்டு, பண்டாரா மலைக்குப் போய்விடுவார்.
"கீர்த்தன் ஸம்பூர்ண யாவயாஸீ ஹாத,
அப்யாஸ கரிதா(ம்) ஜாலா துகா". (௫)
"அப்யாஸ துகயா கரீதஸே ஐஸா,
ஸரிதாஸீ ஜைஸா பாத்ர ஸிந்து". (௬)
"தைஸே ஜே ஐகே தே ராஹே அந்தரீ(ம்),
க்ரந்த யாஹீவரீ வாசீயேலே". (௭)
ஞானதேவ் மஹாராஜின் - ஞானதேவீ, அம்ருதானுபவ், ஏக்நாத் மஹாராஜ் பாகவதத்தின் ’டீகா’ (விளக்கவுரை), பாவார்த்த ராமாயண், ஸ்வாத்மானுபவ், நாம்தேவராயின் அபங்கங்கள், கபீரின் பதங்கள் முதலிய பக்தி மார்கத்தைச் சேர்ந்த எத்தனையோ ஸந்துக்களின் வசனங்களை அவர் ஆழ்ந்து படித்தார்.
"கரூ(ம்) தைஸே பாடாந்தர,
கருணாகார பாஷண". (௧)
"ஜிஹீ(ம்) கேலா மூர்திமந்த,
ஐஸா ஸந்தப்ரஸாத". (௨)
ஸந்த் ப்ரஸாதத்தை அடைந்ததால், அவர் நிர்குண நிராகார பரமாத்மாவை ஸகுண ஸாகாரமாகச் செய்தார். உருவமற்றவரை உருவுள்ளவராகச் செய்தார். மஹாராஜ் புராணங்களைப் படித்தார், சாஸ்திர ஆராய்ச்சி செய்தார்.
"பாஹிலீ(ம்) புராணே(ம்),
தாண்டோளிலீ தருஷணே". (௧)
"புராணீசா இதிஹாஸ,
கோட ரஸ ஸேவிலா". (௧)
மஹாராஜிற்கு இந்த ஏகாந்தவாஸம் மிகவும் பிடித்திருந்தது. இந்த ஏகாந்தத்தில்தான் அவர் ஸகா மற்றும் நெருங்கியவர்களைச் சந்தித்தார். அவர்கள் யார்? அவர்களே வ்ருக்ஷங்கள், கொடிகள், வனத்தில் சஞ்சரிப்பவைகள், மற்றும் மதுரமான, மென்மையான ஸுஸ்வரத்தில் பாடும் பக்ஷிராஜாக்கள். தெய்வத்திடமும் நெருக்கம் இருந்தது.
"வ்ருக்ஷவல்லீ ஆ(ம்)ஹா ஸோயரே வனசரே(ம்),
பக்ஷீயே ஸுஸ்வரே(ம்) ஆளவிதீ". (௧)
"யேணே(ம்) ஸுகே(ம்) ரூசே ஏகாந்தாசா வாஸ,
நாஹீ(ம்) குண தோஷ அங்கா யேத". (௨)
"ஆகாச மண்டப ப்ருதிவீ ஆஸன,
ரமே தேதே(ம்) மன க்ரீடா கரூ(ம்)". (௩)
மஹாராஜின் பத்னி ஸௌபாக்யவதி ஜீஜாபாய், தினமும் வீட்டு வேலைகளைச் செய்து முடித்துவிட்டு, தன் கையால் சமையல் செய்து, மஹாராஜிற்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு, பண்டாரா மலைக்கு வருவாள். மஹாராஜிற்கு போஜனம் அளித்த பின்னர், அவள் சாப்பிடுவாள். மஹாராஜ் பரமார்த்த சாதனத்தில் மூழ்கி இருப்பார் - விதேஹ ஸ்திதியில் இருப்பார். அவருடைய ஸர்வ கார்யங்களையும் ஸௌபாக்யவதி ஜீஜாபாயே செய்து வந்தாள். மஹாராஜின் பரமார்த்தம் ஜீஜாபாயிக்கு மிகவும் பிடிக்கும். சரீர கஷ்டம் இருந்தாலும், பரோபகாரம்; ஸந்த் வசனங்களைப் படிப்பது, மனப்பாடம் செய்வது; வாயால் விட்டலனின் நாமத்தை ஸ்மரிப்பது; மற்றும் இதயத்தில் விட்டலனைத் தியானிப்பது ஆகிய வழியை இடையறாது கடைப்பிடித்து வந்தார். இவ்வாறு செய்துவரும் மஹாராஜின் கனவில், ஸ்ரீ பாண்டுரங்கன் நாம்தேவ்ராயுடன் தோன்றினார். அவர்கள் மஹாராஜை எழுப்பி, ஜகத்தை உத்தாரணம் செய்யும் கவிகளைப் பாடும் கார்யத்தைச் செய்யச் சொன்னார்கள்.
"நாமதேவே(ம்) கேலே(ம்) ஸ்வப்னாமாஜீ ஜாகே(ம்),
ஸவே(ம்) பாண்டுரங்கே(ம்) யேவூனியா(ம்)". (௧)
"ஸாங்கிதலே(ம்) காம கராவே(ம்) கவித்வ,
வாவுகே(ம்) நிமித்ய போலோ(ம்) நகோ". (த்ரு)
"மாப டாகீ ஸள தரிலீ விட்டலே(ம்),
தாபடோனி கேலே(ம்) ஸாவதான". (௨)
"ப்ரமாணாசீ ஸங்க்யா ஸாங்கே சத கோடீ,
உரலே சேவடீ(ம்) லாவீ துகா". (௩)
"த்யால டாவ தரி ராஹேத ஸங்கதீ,
ஸந்தா(ம்)சே பங்கதி பாயா(ம்)பாசீ(ம்)". (௧)
"ஆவடீசா டாவ ஆலோ(ம்)ஸே(ம்) டாகூன்,
ஆதா(ம்) உதாஸீன ந தராவே(ம்)". (த்ரு)
"ஸேவடீல ஸ்தள நி(ம்)ச மாஜீ வ்ருத்தி,
ஆதாரே(ம்) விஸ்ராந்தீ பாவயீன". (௨)
"நாமதேவாபாயீ(ம்) துக்யா ஸ்வப்னீ(ம்) பேடீ,
ப்ரஸாத ஹா போடீ(ம்) ராஹிலாஸே". (௩)
மாஹாராஜ் தானே உத்தாரணம் ஆனார். இப்போது உலகத்தினரை உத்தாரணம் செய்பவரானார். அவருக்கு லபித்த ப்ரஸாதத்தை உலகினருக்கு அளித்தார். பரமாத்மாவை அடைவதின் செய்தியை, வழியை, அவர் வீடுவீடாகப் பரப்பினார்.
"துகா ம்ஹணே மஜ தாடிலே நிரோபா,
மார்க ஹா ஸோபா ஸுகரூப".
மஹாராஜிற்கு கவித்வம் ஸ்புரித்தது (கவி பாடும் திறமை வந்தது).
"யாவரீ ஜாலீ கவித்வாசீ ஸ்பூர்தி,
பாய தரிலே(ம்) சித்தீ(ம்) விடோபாசே(ம்)".
மேலும், மஹாராஜின் வாக்கிலிருந்து அபங்க கங்கா ப்ரவாஹம் எடுத்தது. பாக்யமுள்ள ஸ்ரோதாக்கள் (கேட்போர்கள்) அதைக் கேட்டார்கள்.
"போலவே(ம்) ம்ஹணூன் போலதோ உபாய,
ப்ரவாஹேசி ஜாயே கங்காஜள". (௧)
"பாக்ய யோகே(ம்) கோணா கடேல ஸ்ரவண,
கைசே தேதே(ம்) ஜன அதிகாரீ". (௨)
இந்த்ராயணி நதியின் ப்ரவாஹத்தில் அபங்கங்கள் எழுதிய புஸ்தகங்கள் மிதந்தன.
மஹாராஜின் அபங்கங்களில், வேத-சாஸ்த்ரங்களின் ஸாரமும், மஹாகாவ்யங்களின் பலன்களும், அர்த்தங்களும் வெளியாயின. ஆளந்தியில் ஸ்ரீ ஞானதேவ் மஹாராஜின் (ஜீவ சமாதியின்) மஹாத்வாரத்தில், ஸ்ரீ துகாராம் மஹாராஜ் கீர்த்தன் செய்வதுண்டு. இந்த தேவப்ரஸாதமான அபங்கவாணீ, மஹாபண்டிதரான ராமேஸ்வரபட்டஜீயின் காதில் விழுந்த போது, அவர் திடுக்குற்றார். "இவருக்கு கீதையில் என்ன பாண்டித்யம்? இவர் ஸ்ரீமத் பாகவதத்தைப் பற்றி என்ன அறிவார்? இந்த ப்ரத்யக்ஷ வேதவணீ இந்த பாமர துகோபாவின் வாயிலிருந்தா?" (என எண்ணினார்).
"துகயாசே கவித்வ ஐகூன் கானீ,
அர்த சோதூனி பாஹாதா மனீ(ம்),
ம்ஹணே ப்ரத்யக்ஷ ஹே வேதவாணீ,
த்யாசே முகே கானீ ந ஐகாவீ,
தரீ யாஸீ நிஷேதாவே(ம்),
ஸர்வதா பய ந தராவே(ம்)".
ராமேஸ்வரசாஸ்த்ரி, அவரைக் கண்டித்து, "நீ ஸூத்ரனல்லவா? உன்னுடைய அபங்கவாணியில் வேதார்த்தங்கள் வெளியாகின்றன. அதற்கு உனக்கு அதிகாரம் இல்லை. உன்னுடைய வாக்கில் வரும் அவற்றைக் கேட்பது அதர்மம். இந்த உத்யோகத்தைச் செய்யும்படி உன்னிடம் யார் சொன்னார்கள்?" என்று கேட்டார். துகாராம் மஹாராஜ், "இவை என்னுடைய சொற்களல்ல, தேவவணியாகும்" என்றார்.
"கரிதோ கவித்வ ம்ஹணால ஹே கோணீ,
நவ்ஹே மாஜீ வாணீ பதரீசீ. (௧)
மாஜியே யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,
மஜ விஸ்வம்பர போலவிதோ". (௨)
"நேணே(ம்) அர்த கா(ம்)ஹீ(ம்) ந்வ்ஹதீ மாஜே போல,
வினவிதோ கோபால ஸந்த ஜணீ. (௧)
நவ்ஹதீ மாஜே போல, போலே பாண்டுரங்க,
அஸே அங்க ஸங்க வ்யாபுனியா(ம்)". (௨)
"நாமதேவராயும், பண்டரீராயும் கனவில் வந்து,
கவி புனையும்படி ஆக்ஞாபித்தார்கள்".
"விப்ர ம்ஹணே ஆக்ஞா காரண,
ஸ்ரீசீ கைஸே ஜாணேல ஜன,
யாலாகீ கவித்வ புடாவூன்,
டாகி நேவூன உதகாந்த. (௧)
தேதே(ம்) ஸாக்ஷாத் நாராயண,
ஆபே ரக்ஷீல ஜரீ ஆபண,
தரீ ஸஹஜசி வேதாஹூன,
மான்ய ஹோயீல ஸர்வாசீ(ம்)". (௧௬)
ராமேஸ்வர சாஸ்த்ரி, "உன்னுடைய கவிகளை மூழ்கடித்துவிடு. (இது) தேவவாணியாக இருந்தால், தெய்வம் இதை தண்ணீரிலிருந்து ரக்ஷிக்கும்", என்று சொன்னார். ராமேஸ்வர சாஸ்திரி, பாடீலிடம் (பாடீல் = கிராம அதிகாரி) இதைப்பற்றிக் கூறினார். பாடீலும், சில ஜனங்களும் கோபம் அடைந்தார்கள்.
"கோபலா பாடீல் காவீசே ஹே லோக, (௧)
காய காவே(ம்) ஆதா(ம்) கோணீகடே ஜாவே(ம்),
கா(ம்)வாந்த ராஹாவே(ம்) கோண்யா பளே(ம்)". (௨)
துகாராம் மஹாராஜ், அபங்கள் எழுதிய எல்லா புஸ்தகங்களையும் திரட்டி, கல்லுடன் சேர்த்துக் கட்டி, இந்த்ராயணியின் ப்ரவாஹத்தில், தன்னுடைய கைகளாலேயே மூழ்கடித்தார். இதற்குமுன் பிராமிசரி நோட்டுகளை மூழ்கடித்தார். அது லௌகீகம், இது பரமார்த்தம்.
"புடவில்யா பஹ்யா பைஸிலோ தரணே(ம்)".
துகாராம் மஹாராஜிற்குத் தாங்க முடியாத துக்கம் ஏற்பட்டது. ஜனங்கள், "எந்த மாதியான உதாரணம்? எந்த மாதிரியான ப்ரஸாதம்? எல்லாம் பொய்யும் புரட்டும். என்ன தெய்வம்? என்ன தர்மம்?" என்று நிந்திக்க ஆரம்பித்தனர். மஹாராஜ், தெய்வத்தின் முன்னால், மஹாத்வாரத்தில் இருந்த கல்லின் மீது ’தர்ணா’ செய்து அமர்ந்தார். உயிரைப் பணயம் வைத்து, மரணத்தை எதிர்பார்த்திருந்தார். ௧௩ தினங்கள் கழிந்தன. தெய்வம் வரக்காணோம்.
"தேரா திவஸ ஜாலே நிஸ்சக்ர கரிதா(ம்),
ந பவஸீ அனந்தா மாயபாபா,
துஜவரீ ஆதா(ம்) ப்ராண மீ த்யஜீன,
ஹத்யா மீ காலீன பாண்டுரங்கா,
துகா ம்ஹணே ஆதா(ம்) மாண்டிலே நிர்வாண,
ப்ராண ஹா ஸாண்டீன துஜ வரீ".
இங்கே ராமேஸ்வரசாஸ்த்ரி, மஹாராஜை (அபங்கம் பாடுவதை) தடை செய்துவிட்டு, ஆளந்தியிலிருந்து கிளம்பி, நாகஜரி என்ற ஊற்றின் அருகில் உள்ள பஞ்சவடாவை அடைந்து, ஸ்நானம் செய்ய இறங்கினார். அவர் ஸ்நானம் செய்து கொண்டிருக்கும் அந்தத் தடாகத்திற்கு, அனகட்ஸித்தபகீர் என்பவர், தண்ணீர் எடுக்க வந்தார். "நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?" என்று கேட்டார். அவரைப் பார்த்ததுவும், சாஸ்த்ரிபுவா (அவர் சொல்வதைக் காதால் கேட்கக் கூடாது என்று) காதை விரலால் மூடிக்கொண்டு, நீரில் மூழ்கினார். இந்தச் செய்கையைக் கண்ட ஸித்தருக்குக் கோபம் வந்து, சாபம் கொடுத்துவிட்டார். ராமேஸ்வர சாஸ்த்ரி தண்ணீரிலிருந்து வெளியே வந்ததுவும், அவருடைய சரீரம் (தீப்பட்டதுபோல்) காந்த ஆரம்பித்தது. சாஸ்த்ரி, தேஹத்தை ஈரத் துணியால் போர்த்திக்கொண்டு, சாபத்திலிருந்து விடுதலை அடைய, சிஷ்யர்கள் புடைசூழ, அளங்காபுரிக்கே திரும்பினார். அஜான வ்ருக்ஷத்தினடியில் அனுஷ்டானம் செய்ய அமர்ந்தார்.
இங்கே தேஹுவில், ௧௩ம் நாள் இரவு, பகவான் ஒரு பாலகனாக ஸகுண ரூபம் தரித்து, துகோபாவின் கனவில் வந்து, "நான், உன்னுடைய புஸ்தகங்களை ௧௩ பகலிரவு தண்ணீரில் நின்றுகொண்டு காப்பாற்றி இருக்கிறேன். அவைகள் நாளைய தினம் காலையில் தண்ணீரிலிருந்து வெளிவரும்", என்று கூறினான். அதே கனவு கிராமத்திலுள்ள நம்பிக்கையுள்ள பக்தர்களுக்கும் உண்டாயிற்று. கனவு கண்ட ஸர்வ பக்த மண்டலியினரும் இந்த்ராயணியின் கரைக்கு வந்தார்கள். பிறகு என்ன? எல்லா புஸ்தகங்களும் தண்ணீரிலிருந்து வெளிவந்து, மிதக்க ஆரம்பித்தன. பார்த்தவர்கள் ஒரே தாவாகத்தாவி, அவற்றைக் இக்கரைக்குக் கொண்டுவந்தார்கள். தண்ணீர் அவற்றைக் கொஞ்சமும் கூடத் தொடவில்லை. எல்லோரும் ஜயஜயகாரம் செய்தார்கள். "தன்னுடைய துயர் தீர்க்க, பகவான் கஷ்டப்பட்டானே", என்று மஹாராஜ் கவலை அடைந்தார்.
"தோர அந்யாய ஜாலா,
துஜா அந்த ம்யா(ம்) பாஹிலா,
ஜனாசியா போலாஸாடீ(ம்)
சித்த க்ஷோபவிலே. (௧)
ஊதகீ(ம்) ராகிலே காகத,
சுகவிலா ஜனவாத,
துகா ம்ஹணே ப்ரீத,
ஸாசே கேலே(ம்) ஆபுலே(ம்)".
இங்கே ஆளந்தியில் ஞானதேவ் மஹாராஜ், ராமேஸ்வர சாஸ்த்ரியிடம், "நீ துகோபாவை நிந்தித்ததின் பலனாகும் இது. ஆகையால், இதற்கு இப்போது இருக்கும் ஒரே சிகிச்சை துகோபா இருக்கும் தேஹுவிற்குச் செல்வதே", என்று சொன்னார். ராமேஸ்வர சாஸ்த்ரி தேஹுவிற்குப் புறப்பட்டார். இதை அறிந்த துகோபா, சாஸ்த்ரிபுவாவிற்கு ஒரு அபங்கம் எழுதி, அதைத் தன் சிஷ்யரிடம் கொடுத்து, ஆளந்திக்கு அனுப்பினார். அந்த அபங்கத்தைப் படித்த உடனேயே, சாஸ்த்ரியின் தேஹ எரிச்சல் சாந்தமாகி விட்டது.
"சித்த சுத்த தரீ சத்ரு மித்ர ஹோதீ,
வ்யாக்ர ஹே ந காதீ ஸர்ப தயா.
து:க தே(ம்) தேயீல ஸர்வ ஸுகபள,
ஹோதீல சிதள அக்னிஜ்வாளா".
இதைப் பற்றி ராமேஸ்வர சாஸ்த்ரி, தன்னுடைய அனுபவத்தை:
"கா(ம்)ஹீ(ம்) த்வேஷ த்யாசா கரிதா அந்தரீ(ம்),
வ்யதா ஹே சரீரீ பஹூ ஜாலீ.
ம்ஹணே ராமேஸ்வர த்யாச்யா ஸமாகமே(ம்),
ஜாலே ஹே ஆராம தேஹ மாஜே".
ராமேஸ்வர பட்ஜீ, துகாராம் மஹாராஜைத் தரிசிக்க தேஹுவிற்கு வந்து, மஹாராஜின் கதா, கீர்த்தனத்தைக் கேட்பதற்காக அங்கேயே தங்கிவிட்டார். ராமேஸ்வர பட்ஜீக்கு ஏற்பட்ட சாபம் நிவர்த்தியான விஷயம் தெரிந்தவுடன், அனகட்ஷாவுக்கு மனக் குழப்பம் உண்டாயிற்று. ஆகையால், துகாராம் மஹாராஜைப் பரீக்ஷை செய்து உபத்ரவிக்க, தேஹுவிற்கு வந்தார்.
மஹாராஜின் வீட்டிற்கு வந்து, தன் பிக்ஷாபாத்திரம் நிறையும்படி பிக்ஷை கேட்டார். மஹாராஜின் புத்ரி ஒரு சிட்டிகை மாவு பாத்திரத்தில் இட்டவுடனேயே, அது பூர்ணமாக நிறம்பி வழிந்தது. ஸித்தரின் ஸாமர்த்யம், மஹாராஜின் வீட்டு வாசலிலேயே தீர்ந்து விட்டது. அனகட்ஷா பக்திபாவத்துடன், துகாராம் மஹாராஜைத் தரிசித்து, மஹாராஜின் பஜன், கீர்த்தன் கேட்பதற்காக, மஹாராஜ் அருகிலேயே தங்கி விட்டார்.
சாஸ்த்ர ஞானம், பாண்டித்யம், ஐஸ்வர்யம், ஸித்திகள் ஆகியவைகள் ஹரிபக்தர்களின் சரணத்திற்கு வந்து, தங்கி விடுகின்றன. அபங்க புஸ்தகங்கள் கரையேறிய நற்செய்தி தேசம்தோறும் பரவிற்று. புஸ்தகங்கள் கரையேறியதால் லோகோபவாதமும் தகர்ந்தது. பெயருக்கேற்றபடி, அபங்கவாணீ நாசமற்றது என்பது உறுதியாயிற்று. பரமாத்மாவின் ஸகுண தரிசனம் கிடைக்க வைக்கும்; மஹாராஜின் கதா, கீர்த்தனா மார்கம் திறந்து விடப்பட்டது.
மஹாராஜும் இரண்டு ஸன்யாசிகளும்
"அவகா ஜாலா ராம்ராம்,
கோணீ கர்ம ஆசரேன". (௧)
(ஒரு நாள்) மஹாராஜின் கீர்த்தன், நிறைந்த கூட்டத்துடனும், புதிய உற்சாகத்துடனும் ஆரம்பமாயிற்று. உலகினரின் உத்தாரணத்திற்கும், மக்களின் விழிப்புணர்ச்சிக்கும் மஹாராஜின் பஜனும், கீர்த்தனுமே ஸாதனம்.
"துகா ம்ஹணே கேலீ ஸாதனா காளணீ,
ஸுலப கீர்தனீ ஹோவூனீ டேலா". (௪)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது மதுராவில். ஆனால், ப்ரேம ஸுகத்தை கொள்ளை கொண்டவர்கள் கோகுலவாஸிகளாகும். மஹாராஜ் பிறந்தது தேஹுவில். ஆனால், பக்தி ப்ரேமையின் ஸுகத்தைக் கொள்ளை கொண்டவர்கள் லோஹகாவிலிருந்த ஜனங்களாகும். லோஹகாவ் மஹாராஜின் தாய் வழிப் பாட்டனார் ஊராகும். மகாராஜின் கீர்த்தன், பெரும்பாலும் லோஹகாவிலேயே நடந்து வந்தது. ஒரு ஸமயம், இரண்டு ஸன்யாஸிகள் மஹாராஜின் கீர்த்தனுக்கு வந்து, உட்கார்ந்தார்கள். அவர்களுக்கு என்ன தென்பட்டது? - ஆண்களும், பெண்களும் கதா-கீர்த்தனத்தில் ஈடுபட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உயர்ந்தவர், தாழ்ந்தவர், பிராமணர், சூத்திரர் முதலியோர் ஒருவர் காலில் மற்றவர் விழுந்து, வணங்கிக் கொண்டிருந்தார்கள்; பேதபாவமே காணப்படவிலை. இக்காக்ஷிகளைக் கண்ட அவர்கள், துகோபாவை நிந்தித்து, பிராமணர்களையும் திட்டினார்கள். "நீங்கள் கர்ம ப்ரஷ்டர்களாகி விட்டீர்கள். கர்ம மார்கத்தை விட்டுவிட்டு, ராம்-ராம் என்று சொல்ல உட்கார்ந்து விட்டீர்கள்", என்று கூறி, அங்கிருந்து கிளம்பினார்கள். கஷ்கத்தில் மான் தோலை இடுக்கிப் பிடித்துக்கொண்டு, புகார் செய்வதற்காக, தாதோஜீ கோண்டதேவாவிடம் சென்றார்கள்.
"காகே(ம்) கடாஸன ஆட படே,
கடபட ஹுஸகலே, (௧)
தாத கரா தாத கரா,
பஜீத கோரா லாஜ நாஹீ(ம்), (௨)
அவகா ஜாலா ராமராம,
கோணீ கர்ம ஆசரேன". (௩)
அவர்கள், "லோஹகாவிலுள்ள பிராமணர்கள் ப்ரஹ்ம (அத்யயனாதி) கர்மாக்களை விட்டுவிட்டு, சூத்திரர்கள் சரணங்களில் விழுகிறார்கள். மேலும் ராம்-ராம் என்று சொல்லுகிறார்கள். அதர்மம் போதை ஏறிப்போய் இருக்கிறது. ஆகையால், நீங்கள் இதைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும்", என்று புகார் கொடுத்தார்கள். தாதோஜி தன்னுடைய ஸேவகர்களை அனுப்பி, பிராமணர்களுக்கு ௧00 ரூபாய் அபராதம் விதித்தார்.
துகாராம் மஹாராஜும், கிரமத்தினரும் புனேக்கு வரவழைக்கப் பட்டார்கள். அவர்கள், (முலா-முத்தா நதிகளின்) ஸங்கமத்திற்கு வந்தார்கள். அங்கே, மஹாராஜ் கீர்த்தன் செய்ய ஆரம்பித்தார். துகோபா வந்திருப்பதை அறிந்த புனே நகரிலுள்ள எல்லா ஜனங்களும், மஹாராஜின் தரிசனத்திற்கும், கீர்த்தன் கேட்கவும் வந்து குழுமினார்கள். தாதோஜீயும் புறப்பட்டு வந்து, துகாராம் மஹாராஜின் கீர்த்தன் கேட்க அமர்ந்தார். அந்த ஸன்யாஸிகளும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு துகோபா பரமாத்ம ஸ்வரூபமாகத் தெரிந்தார். அதன்பின் அவர்கள் (ஸன்யாஸிகள்) துகாராம் மஹாராஜின் சரணத்தில் விழுந்து புரளும் அளவுக்கு பெரிய மாற்றம் ஏற்பட்டது. தாதோஜீ, அவர்களிடம், "பிராமணர்கள் சூத்திரர்களின் கால்களில் விழுவது அதர்மம் என்று புகார் கொடுத்தீர்கள். நீங்களே அவர்கள் காலில் விழுந்து வணங்குவது ஏன்?, என்று அவர்களுடைய செய்கைக்கு விளக்கம் கேட்டார். அவர்கள் அதற்கு, "கீர்த்தன் செய்யும்போது துகோபாராய் ஸாக்ஷாத் நாராயணனாகவே எங்களுக்குத் தென்பட்டார்", என்று விடையளித்தார்கள். தாதோஜீ ஸ்வயம் மஹாராஜிற்கு மரியாதை செய்து, ஸன்யாஸிகளை மிரட்டி, நகரத்திற்கு வெளியே துரத்திவிட்டார்.
’தர்ணா’ செய்தவர்
பீட் பர்கானாவைச் சேர்ந்த தேஷ்பாண்டே வயது முதிர்ந்தவர். அவர் பண்டிதர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார். படித்து, பயிற்சி செய்து பண்டிதராவது, இந்த வயதில் முடியாத காரியமானதினால், அவர் ஆளந்தியில் ஞானதேவ் மஹாராஜிடம் சென்று ’தர்ணா’வில் அமர்ந்தார். ஞானதேவ் மஹாராஜ் அவரிடம், "பாபா! நீ துகோபாவிருக்கும் தேஹூவிற்குப் போ. இப்போது ’கோர்ட்’ அங்கேதான் நடக்கிறது", என்று சொன்னார். அதன்படி அவர் தேஹுவிற்கு சென்றார். அப்போது துகாராம் மஹாராஜ் ௩௧ அபங்கங்கள் இயற்றினார். இவற்றில் பகவானை வேண்டும் அபங்கங்கள் ௭, உபதேசம் ௧௧ ஆகியவை அடங்கியுள்ளன. இந்த அர்த்த புஷ்டியுள்ள அபங்கங்களில் துகாராம் மஹாராஜின் புத்திக் கூர்மை, சிந்திக்கும் திறன், உபதேசிக்கும் முறை, மற்றும் தத்வ ஞானம் ஆகியவை காணக் கிடைக்கின்றன. முதலில் அவர் பகவானிடம், "தெய்வமே! உன்னால் எவருடைய மனதிலும் அறிவை உண்டுபண்ண முடியும். இவருக்கு அபயதானம் அளித்து, ஸமாதானம் செய். அந்த உன்னுடைய பெருமையை நீயே வைத்துக்கொள்", என்று வேண்டினார்.
தர்ணா செய்தவருக்கு உபதேசம்
"புஸ்தகங்கள் படிப்பது என்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளாதே. சீராக ஒரே கார்யம் மாத்திரம் செய். தெய்வத்திற்காகவே தெய்வத்தை பக்தி செய். வயதாகி விட்டதால் இனிமேலும் தாமதிக்காதே.
"தேவாசியே சாடே ஆளவாவே தேவா,
வோஸ தேஹபாவ பாடோனியா(ம்)". (௧)
மனதால் கோவிந்தனை ஸ்மரித்தால் கோவிந்தனாகவே ஆகிவிடுவாய்.
"கோவிந்த கோவிந்த, மன லாகலியா சந்த,
மக கோவிந்த தே காயா, பேத நாஹீ(ம்) தேவா தயா". (௧)
ஸுகமாக இரு, நன்றாகச் சாப்பிடு, பரமாத்மாவைச் சிந்தனை செய். ஹரிகதையே எல்லோருக்கும் மாதா, அதுவே ஸுக ஸமாதி, களைத்தோருக்கு நிழல், ஓய்விடம்.
"ஸுகாசீ ஸமாதீ ஹரிகதா மாவூலீ,
விச்ராந்தி ஸாவூலீ சிணலியா(ம்)சீ". (௧)
விட்டலதாஸனாகி, கவலைகளை ஒதுக்கிவிடு. உன் தேஹத்தில் எல்லா பலமும் வந்துவிடும்". மஹாராஜின் இந்த விலைமதிப்பற்ற உபதேசத்தை, இந்த ௧௧ அபங்கங்களை, அவர் தன்னுடைய மூர்க்கத்தனத்தினால் விட்டுவிட்டுப் போய்விட்டார்.
"தேவாசே உசித ஏகாதச அபங்க, மஹாபள த்யாக கரோனி கேலா".
சத்ரபதி சிவாஜியும், துகாராம் மஹாராஜும்
துகாராம் மஹாராஜின் கீர்த்தி சிவாஜி ராஜாவின் காதிற்கு எட்டியது. அவர் மஹாராஜிற்கு விளக்கு, குடை, குதிரைகள், ரத்தினங்கள் ஆகியவற்றை, தன்னுடைய ஸேவகர்கள் மூலம் கொடுத்தனுப்பினார். துகோபா அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர், நான்கு அபங்கங்கள் அடங்கிய கடிதத்துடன், அந்த வெகுமதிகளை சிவாஜி ராஜாவிடமே திருப்பி அனுப்பிவிட்டார். அவர் பகவானிடம், ("நாவடே ஜே சித்தா, தே தூ(ம்) ஹோசீ புரவிதா") "விளக்கு, குடை, குதிரைகள் முதலியவை எனக்குத் தேவையற்றவை. தெய்வமே! இதின் என்னை ஏன் சிக்க வைக்கிறாய்?" என்று கேட்டார். மஹாராஜின் இந்தப் பற்றின்மை சிவாஜி ராஜாவிற்கு ஆச்சர்யம் அளித்தது. வஸ்த்ரங்கள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், பொற்காசுகள் முதலியவற்றை எடுத்துக்கொண்டு, ஸேவகர்களுடன், தானே, அவரைத் தர்சிக்க லோஹகாவுக்கு வந்தார். அந்த ராஜ த்ரவ்யங்களைப் பார்த்து மஹாராஜ்,
"காய திலா டேவா, ஆ(ம்)ஹா விட்டலசி வ்ஹாவா, (௧)
து(ம்)ஹீ களலே தீ உதார, ஸாடீ பரிஸாசீ கார, (௨)
துகா ம்ஹணே தன, ஆ(ம்)ஹா கோமாம்ஸ ஸமான". (௩) என்று கூறினார். "(நீ அனுப்பிய செல்வம் எனக்கு பசுவின் மாமிசம் போன்று ஒதுக்கத் தக்கதாக உள்ளது). எறும்பும், அரசனும் எனக்கு ஒன்றுதான். அதேபோல பொன்னும், மண்ணும் எனக்கு ஸமானமே.
"முங்கீ ஆணி ராவ, ஆ(ம்)ஹா ஸமானசி ஜீவ, (௧)
ஸோனே(ம்) ஆணி மாதீ, ஆ(ம்)ஹா ஸமானசி சித்தீ(ம்)". (௨)
எனக்கு இதிலெல்லாம் ஸுகம் கிடைப்பதில்லை. நீ பகவானின் நாமத்தச் சொல். உன்னை ஹரிதாஸன் என்று சொல்லிக்கொள். அதுவே எனது ஆசை".
"ஆ(ம்)ஹீ தேணே(ம்) ஸுகீ, ம்ஹணா விட்டல விட்டல முகீ, (௧)
ம்ஹணவா ஹரிசே தாஸ, துகா ம்ஹணே மஜ ஹே ஆஸ". (௨)
மஹாராஜின் உபதேசங்களில் ஆழ்ந்து, ராஜா அரசாங்கம் நடத்துவதை விட்டுவிட்டு, துகோபாவின் பஜன், கீர்த்தன் கேட்பதில் மூழ்கி விட்டார். ஆகையால், துகோபா அவருக்கும், அவருடைய ஸைன்யத்திற்கும் க்ஷத்ரிய தர்மத்தை உபதேசித்தார்.
"ஆ(ம்_ஹீ ஜகாலா உபதேச கராவா,
ஆபண க்ஷாத்ரதர்ம ஸாம்பாளாவா,
பாண்டண படலே அஸதா(ம்) ஸேவகா(ம்)னீ(ம்),
ஸ்வாமீச்யா புடே(ம்) வ்ஹாவே(ம்)".
குண்டுகள், அம்புகள் வர்ஷிக்கும்போது, ஸைன்யம் அவற்றை ஸஹித்துக்கொண்டு, தங்களையும் காத்துக் கொண்டு, சத்ருக்களை மடக்கி, ஜயிக்க வேண்டும். அவர்களைத் தங்களுக்குப் பின்னால் வரவிடக்கூடாது. ராஜாவை எப்போதும் ரக்ஷிக்க வேண்டும். இப்படிப்பட்ட போர்வீரர்கள், ஸேவகர்களை உடையவர், மூவுலகிலும் ஸாமர்த்யசாலியான ராஜாவாவார். துகாராம் மஹாராஜ், சிவாஜி ராஜாவை ஆசீர்வதித்து, விடை கொடுத்தனுப்பினார். ராஜாவும், வீரர்களும் மஹாராஜின் உபதேசங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு, அதேபோல காரியத்திலும் இறங்கினார்கள். மஹாராஜின் ஆசீர்வாதத்தால், அவர் மிகுந்த ஸாமர்த்யமுள்ள மஹாராஜாவாக விளங்கினார்.
"மாஜ்யா விடோபாசா கைஸா ப்ரேமபாவ, ஆபணசி தேவ ஹோய குரு", (என்னிடத்தில் விடோபாவிற்கு எவ்வளவு பிரியம். எனக்கு என் பகவனே குருவானான்).
ஞானமார்கத்தில், குரு மஹத்வம் விசேஷம், பக்தி மார்கத்தில் அப்படியல்ல. "மேகவ்ருஷ்டினே(ம்) கராவா உபதேச" [மழை பொழிவது போல (பிரதி பலன் கருதாது) உபதேசம் செய்ய வேண்டும்], என்றகருத்தைக் கொண்டிருந்த மஹாராஜிற்கு அத்வைத சாஸ்த்ரம் பிடிக்காது. "அத்வைதாசீ வாணீ, நாஹீ(ம்) ஐகத மீ கானீ" (அத்வைதத்தை என் காதுகள் கேட்காது). மஹாராஜிற்கு ஸகுண ரூபத்திடம் விசேஷமான ப்ரேமை. அதனால் அவர் குரு சரணத்தைத் தேடிப் போகவில்லை.
"அத்வைத சாஸ்த்ர நாவடே யாஸீ,
யாஸ்தவ சரண ந ஜாய ஸத்குருசீ",
புடே(ம்) வாட படேல ஐஸீ,
குரு பக்தீஸீ அவரோத,
ஏக ஸ்ரேஷ்ட ஆசரலா ஜைஸே,
ஜன பாஹோனி வர்ததீ தைஸே(ம்),
தரீ ஆபண தரூனி விப்ரவேச,
த்யாவா துகயாஸீ அனுக்ரஹ".
ஒரு ஸமயம், மஹாராஜ் கனவு கண்டார் - இந்த்ராயணியில் ஸ்நானம் செய்துவிட்டு, கோவிலுக்குப் போகும் வழியில், ஒரு பிராமணரைக் கண்டு, நமஸ்காரம் செய்தார். பிராமணர் ஸந்தோஷமடைந்து, அவருடைய தலை மீது கையை வைத்து, "ராம்க்ருஷ்ண ஹரி" என்ற மந்திரத்தை உபதேசித்தார். தன்னுடைய (குரு)பரம்பரையையும் அறிவித்தார். இந்த ஸம்பவம் ஒரு மாசி மாதத்து கிருஷ்ணபக்ஷ தசமி, வியாழக் கிழமையில் நிகழ்ந்தது.
"ஸாபடவிலே வாடே ஜாத கங்காஸ்நானா,
மஸ்தகீ(ம்) தோ ஜாணா டேவிலா கர. (௨)
ராகவ சைதன்ய கேசவ சைதன்ய,
ஸாங்கிதலீ குண மாலிகேசீ. (௪)
பாபாஜீ ஆபுலே ஸாங்கிதலே(ம்) நாம,
மந்த்ர திலா ராம்க்ருஷ்ண ஹரி. (௫)
மாக சுத்த தசமீ பாஹோனி குருவார,
கேலா அங்கீகார துகா ம்ஹணே". (௬)
துகாராம் மஹாராஜ், ஸ்வயமாக யாரிடமும் மந்த்ரம் வேண்டும் என்று கேட்கவில்லை. அவரே, இதைப்பற்றி "நாஹீ ம்யா(ம்) வஞ்சிலா மந்த்ர கோணாபாசீ(ம்), ராஹிலோ(ம்) ஜிவாசீ தரோனியா(ம்)", எனக்கூறியுள்ளார்.
"நேணோ புங்கோ கான, நாஹீ(ம்) ஏகாந்தீசே(ம்) ஞான,
நாஹீ(ம்) தேகிலா தோ டோளா, தேவ தாகவூ(ம்) தே(ம்) களா".
மகராஜ், "ஏகாந்த ஞானமும் கிடையாது, காதாலும் கேட்கவில்லை, கண்ணாலும் காணவில்லை. ஆனால், பகவான் காண்பித்ததை அறிவேன்", என்று கூறுகிறார்.
மஹாராஜின் போதனைகளும், உபதேசங்களும், அறிவுரைகளும்
பிரபஞ்சத்தில், கடவுளுக்கு வாழ்வில் இடம் அளிக்காதவர்களுக்கும், பகவானை ஜீவிதத்தின் ஒரு அங்கமாகக் கொள்ளாதவர்களுக்கும் ஸுகம் கிடைக்கவே கிடைக்காது.
"ஆபுலா தோ ஏக தேவ கரோனீ க்யாவா,
தேணே(ம்) வின ஜீவா ஸுக நோஹே". (௨)
"மாஜா பஹா அனுபவ, கேலாதேவ ஆபுலா. (௧)
போலவலே தேசீ த்யாவே(ம்), உத்தர வ்ஹாவே(ம்) தே(ம்) காளீ(ம்) (௨)
"ஹா கே மாஜா அனுபவ, பக்திபாவ பாக்யாசா. (௧)
ருணீ கேலா நாராயண, நோஹே க்ஷண வேகளா". (௨)
என் அனுபவத்தை பார். நான் பகவானை என்னுடையவனாகச் செய்திருக்கிறேன். கேட்டபோது, கேட்ட இடத்தில் அவன் எனது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறான். அந்த அனுபவத்தை எப்படிச் சொல்லுவேன்? தெய்வ சங்கல்பம், மஹாராஜின் உலகியல் வாழ்வைப் பாதாளத்தில் அழுத்தியது. அதே தெய்வ சங்கல்பத்தினால், அவர் தன்னை பகவானிடம் பிணைத்துக் கொண்டார். தெய்வத்தைப் பிணைக்க முடியாது. எதனாலும் பிணைக்கப்பட முடியாதவன். அப்படியானால், மஹாராஜ் எப்படிப் பிணைத்தார்? ப்ரேமையினால் பிணைத்தார்.
"ப்ரேமஸூத்ர தோரீ,
நேதோ திகடே ஜாதோ ஹரி". (௧)
ப்ரேம ஸுத்ரத்தால் கட்டிவிட்டால், அவன் நாம் இழுக்கும் இடத்திற்கு வருவான்.
"ஆ(ம்)ஹீ(ம்) க்யாவே(ம்) துஜே(ம்) நாம,
து(ம்)ஹீ(ம்) ஆ(ம்)ஹா(ம்) த்யாவே ப்ரேம".
நாங்கள் உன்னாமத்தை ஸ்மரிக்கிறோம். நீ எங்களுக்கு ப்ரேமையைக் கொடு.
ஸந்துக்களின் ஊரில் எப்போதும் பொற்காலமே. குழப்பமோ, துக்கமோ ஒருக்காலும் இருக்காது. உபதேசம் என்னும் பேட்டையில் ஸந்துக்கள் ப்ரேம ஸுகத்தை கொடுக்கல்-வாங்கல் செய்கிறார்கள்.
"ஸந்தாச்யா கா(ம்)வீ(ம்)ஹீ ப்ரேமாசா ஸுகாள,
நாஹீ(ம்) தளமள து:க லேச,
ஸந்தா(ம்)சா வ்யாபார உபதேசாசீ பேட,
ப்ரேமஸுகஸாடீ(ம்) தேதீ கேதீ".
பக்தி ப்ரேம ஸுகம் என்றால் என்ன? இது பண்டிதர்கள் ஞானிகள், முக்தர்கள் ஆகியோருக்குத் தெரியாது; அவர்களால் தெரிந்து கொள்ளவும் முடியாது. ("பக்தி ப்ரேம ஸுக நேணவே ஆணிகா, பண்டிதா வாசகா ஞானியாஸீ"). இந்த ப்ரேமையினால் ஸமாஜம் இணைக்கப் படுகிறது. ப்ரேமை என்னும் கயிற்றால் ஸமாஜம் கட்டப் படுகிறது. ப்ரேமையில், என்னுடையது-உன்னுடையது என்ற பேதமே தோன்றாது. ப்ரேமையினால் வாழ்வு ஸுகமும், வளமும் நிறைந்ததாக ஆகிறது. இந்த தெய்வீக ப்ரேமை, பகவானை இடையறாது ஸ்மரிப்பதால் கிடைக்கிறது. ஸந்துக்களுடைய ஸான்னித்தினால் அடையப்படும் ப்ரேமையினால் துக்கம் ஸுகமாகிறது. மனித வாழ்வு முழுவதுமாக மாறி விடுகிறது.
உபதேசம்.
"உபதேச தோ பலத்யா ஹாதீ(ம்),
ஜாலா கிதீ தராவா,
ஆதா(ம்) தரீ புடே(ம்) ஹாசீ(ம்) உபதேச,
நகா கரூ(ம்) நாச ஆயுஷ்யாசா,"
(கடைப்பிடிக்காதோருக்கு உபதேசிப்பதில் பயனில்லை. இப்போது, "இனிமேலாவது, வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள் என்பதே உபதேசம்).
மோலாசே(ம்) ஆயுஷ்ய ஜாதே ஹாதோஹாத,
விசாரீ பாஹாத லவலாஹீ,
காத ஜாதோ துகா".
"ஹாசி உபதேச லோகா,
("வாழ்க்கையைப் பற்றி சிறிதுகூட சிந்திக்காவிட்டால், விலை மதிப்பற்ற அது வீணாகிவிடும்", என்று துகா பாடுகிறார். உலகினருக்கு, இதே அவரது அறிவுரை).
துகா ம்ஹணே ஹித ஹோய தோ வ்யாபார,
கரா காய பார சிகவாவே(ம்)".
(துகா சொல்லுகிறார், "தனக்கு ஹிதத்தைத் தருவதையே கடைப்பிடியுங்கள். இதைப் பற்றி வேறென்ன கற்பிக்க முடியும்?")
"ஆபுலியா ஹிதா ஜோ அஸே(ம்) ஜாகதா,
தன்ய மாதா பிதா தயாசாசியே,
குளீ கன்யா புத்ர ஹோதீ ஜே ஸாத்விக,
தயாசா ஹரீக வடே தேவா,
கீதா பாகவத கரீதீ ஸ்ரவண,
அகண்ட சிந்தன விடோபாசே(ம்),
ஹித தே(ம்) கராவே(ம்) தேவாசே சிந்தன,
கரோனியா(ம்) மன சுத்த பாவே(ம்),
துகா ம்ஹணே பார,
தோடா தரீ உபகார".
("தனக்கு ஹிதமானதைத் தேடிக்கொள்பவனின் மாதா, பிதா மேம்பட்டவர்கள். இப்படிப்பட்ட ஸாத்வீகமான குலத்தில் பிறக்கும் புத்ரிகளும், புத்திரர்களும் பகவானுக்கு பிரியப்பட்டவர்கள். கீதையும், பாகவதமும் கேட்கப்பட வேண்டும். விடோபாவை இடையறாது சிந்திக்க வேண்டும். தூய, சஞ்சலமற்ற மனதுடன் பகவானைச் சிந்திப்பது, எல்லா நலன்களையும் அருளும்", என்று துகா கூறுகிறார்).
ஸந்த ஸங்கம்
"ஸங்க ந கராவா துர்ஜனா(ம்)சா,
கரீ ஸந்தா(ம்)சா ஸாயாஸ,
பதன உத்தார ஸந்தா(ம்)சா மஹிமா,
த்யஜாவே(ம்) அதமா ஸந்த ஸேவீ,
ஜோடோனியா(ம்) தன உத்தம வ்யவஹாரே(ம்),
உதாஸே(ம்) விசாரே(ம்) வேச கரீ".
(துர்ஜனங்களுடன் சேராதீர்கள். ஸந்த ஸங்கத்தில் சேருவதற்குப் பாடுபடுங்கள். தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை உத்தாரணம் செய்வதே ஸந்துக்களின் மஹிமை. ஆகையால், தீயவைகளை விட்டுவிட்டு, ஸந்துக்களிடம் சென்று சேருங்கள். நல்வழியில் பொருளீட்டுங்கள். பற்றற்ற மனதுடன் சேமியுங்கள்). மஹாராஜ் நல்லெண்ணம், ஸதாசாரம், ஸமத்துவம் ஆகியவற்றையே கற்பிக்கிறார்.
நாஹீ(ம்) பிடபாட, துகா ம்ஹணே ஸானாதோர,
தீக்ஷண உத்தரே(ம்), ஹாதீ(ம்) கேவூனி பாண பிரே,
துகா ம்ஹணே லாஸு பாஸூ தேவூ டாவ,
ஸுகாசா உபாய புடே(ம்) ஆஹே".
துகாராம் மஹாராஜின் பின்பாட்டுக்காரர்களும்,
அவரைப் பின்பற்றியவர்களும், சிஷ்யர்களும்.
துகாராம் மஹாராஜ் கீர்த்தன் செய்யும்போது, தாளம் போட்டு, பின்பாட்டுப் பாடிய ௧௪ பேர்களைப் பற்றி, ஸந்த சரித்ரம் எழுதிய மஹிபதிபாபா (௧௭௧௫-௧௭௯0), அந்தச் சரித்ரத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கீர்த்தன் நடக்கும்போது த்ருபதத்தைப் (த்ருபதம் = பல்லவி) பாடுவார்கள். அவர்கள் கீழே குறிப்பிடப் பட்டுள்ளோர் ஆவார்கள்:
௧) மஹாதஜீபந்த் குல்கர்ணீ –
இவர் தேஹு கிராமத்தின் குல்கர்ணீ (கணக்குப் பிள்ளை). பஹிணாபாயும் தன்னுடைய அபங்கத்தில் இவரைக் குறிப்பிட்டுள்ளார். தேஹுவிலுள்ள கோவிலின் கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்து வந்தவர்.
௨) கங்காதரபாபா மவாள் –
தளேகாவ் என்ற பக்கத்து கிராமத்தில் வஸித்தவர். அபங்கம் எழுதுபவர். துகோபாவிற்கு கைங்கர்யம் செய்து வந்தார் என்ற ஆவணக்குறிப்பு உள்ளது.
௩) ஸந்தாஜீ தேலீ ஜகனாடே –
’சாகண்’ என்ற கிராமவாசி. துகோபாவின் அபங்கங்களை எழுதி வந்தவர்.
௪) கான்ஹோபா –
துகோபாவின் ஸஹோதரர்.
௫) மாலஜீ காடே –
யேலவாடீ கிராமத்தவர். துகோபாவின் மாப்பிள்ளை.
௬) கோண்டோபந்த் லோஹகர் –
லோஹகாவில் வஸித்தவர்.
௭) கவார் சேட் வாணீ –
’ஸுடும்பரே’ என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
௮) மல்ஹார்பந்த் குல்கர்ணீ –
சிகலீ கிராமத்தவர்.
௯) ஆபாஜீபந்த் லோஹகாவ்கர்.
௰) ராமேஸ்வர பட்ட பஹுள்கர்.
௱) கோண்டபாடீல் –
லோஹகாவினர்.
௲) நாவஜீ மாளீ –
லோஹகாவ்.
௳) சிவபா காஸார் –
லோஹகாவ்.
௴) ஸோனபா டாகுர் –
கீர்த்தன் சமயத்தில் துகோபாவிற்கு மிருதங்கம் வாசிப்பவர்.
துகாராம் மஹாராஜின் சிஷ்யை பஹிணாபாய்க்கு, கனவில் மஹாராஜின் உபதேசம் கிடைத்தது. துகோபாவின் தரிசனத்திற்கு வந்த அவர், மஹாராஜின் அபங்கவாணியால் ஆகர்ஷிக்கப் பட்டார். பஹிணாபாய் துகாராம் மஹாராஜின் கதா, கீர்த்தனைகளை நேரில் கேட்டவர். மாம்பாஜி மீது வெறுப்பு கொண்டவர். (தன் தோட்டத்தில், மஹாராஜின் மாடு மேய்ந்ததால், அவரை ஒருஸமயம் மாம்பாஜி கம்பால் அடித்து விட்டார். மஹாராஜ், அடித்த கைகள் வலிக்குமே என்று அவருக்கு தைலம் தேய்த்து விடப் போனார்). பஹிணாபாயின் அபங்கங்கள் துகோபாவின் அபங்கங்களுக்கு அடுத்தபடியாக எண்ணத் தகுந்தவை. அவைகளை ஒரு தடவையாவது படிக்க வேண்டும்.
கடைசிப் பயணம்
ஒரு கார்த்திகை மாதத்து கிருஷ்ண பக்ஷத்து ஏகாதசியன்று, ஆளந்தியில் ஞானதேவ் மஹாராஜின் ஜீவஸமாதியின் முன் மஹாராஜின் கீர்த்தன் நடந்து கொண்டிருந்தது. பெரும் கூட்டம் கூடியிருந்தது. அன்று கீர்த்தன் செய்ய எடுத்துக்கொண்ட அபங்கம்:
"பக்தீ தே(ம்) நமன வைராக்ய தோ த்யாக,
ஞானப்ரஹ்மீ(ம்) போக ப்ரஹ்ம தனூ".
(சரீரம் ப்ரம்மத்துடன் ஐக்யமாகும் என்பது அபங்கத்தின் தாத்பர்யம்). "சரீரம் எங்கேயாவது ப்ரம்மத்துடன் ஐக்யமாகுமா? எவராவது இவ்வாறு செய்திருக்கிறார்களா?", என கீர்த்தன் கேட்க வந்திருந்த, ஆத்ம-அனாத்ம விசாரம் செய்யும் ஞானி ஒருவர் மஹாராஜிடம் கேட்டார். துகோபா, "நான் செய்து காட்டுகிறேன்", என்று பதிலளித்தார்.
"கோடவீன லாள ப்ரஹ்மஞான்யாஹாதீ(ம்),
முக்தா ஆத்மஸ்திதீ ஸாண்டவீன,
ப்ரஹ்மீபூத காயா ஹோதஸே கீர்தனீ(ம்),
பாக்ய தரீ ருணீ தேவா ஐஸா".
ஒரு ஸமயம், லோஹகாவில் மஹாராஜின் கீர்த்தன் நடந்து கொண்டிருக்கும்போது, பகைவர்கள் கிராமத்தை ஆக்ரமித்து, கொள்ளை அடித்தார்கள். இதைக் கண்டு துயருற்ற துகோபா, தெய்வத்திடம், "பிறர் படும் துன்பத்தை என் கண்களால் பார்க்க முடிவதில்லை. மிகவும் துக்கம் உண்டாகிறது", என்று பிரார்த்தித்தார். ஆனால், தெய்வத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
"ந தேகவே(ம்) ஐஸா ஹா ஆகந்த,
பரபீடே சித்த து:கீ ஹோதே(ம்)".
மூன்றாவது ஸந்தர்பம் – ஞானதேவ் மஹாராஜிற்கு துகோபா அபாரமான ஸேவை செய்திருக்கிறார். அந்த நன்றிக்காக, ஞானதேவ் மஹாராஜ் துகோபாவின் பத்னி ஜீஜாபாயின் வயிற்றில் உருவானார். இதைப் புரிந்துகொண்ட மஹாராஜ், பகவான் தமக்கு ஸேவை செய்வது சரியல்ல என்று கருதினார். அதனால், எல்லோரிடமும், "நான் வைகுண்டம் செல்ல இருக்கிறேன். நீங்களும் என்னுடன் வாருங்கள்", என்று கூறினார்.
ஆனால், எவரும் தயாராக இல்லை. மஹாராஜ் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, இந்த்ராயணியின் கரைக்கு வந்து, ஒரு மரத்தின் நிழலில் கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தார். ௧௪ தாளக்கரிகளையும் ஆலிங்கனம் செய்தார். மஹாராஜின் புதல்வர்கள் மஹாதேவும், விடோபாவும் வந்து நமஸ்கரித்தார்கள். மஹாராஜ் அவர்களுடைய தலையில் கை வைத்து, ஆசீர்வதித்தார். ஜீஜாபாயை நோக்கிவிட்டு, எல்லோரையும் பார்த்து:
"ஸகளஹீ மாஜீ போளவண கரா,
பரதோனி கரா ஜாவே(ம்) து(ம்)ஹீ,
வாடவேள ஜாலா உபா பாண்டுரங்கா,
வைகுண்டா ஸ்ரீரங்க போலாவதோ,
ஆ(ம்)ஹீ ஜாதோ து(ம்)ஹீ க்ருபா அஸோ த்யாவீ,
ஸகளா(ம்) ஸாங்காவீ வினந்தீ மாஜீ,
அந்த:காளீ விடா ஆ(ம்)ஹா(ம்)ஸீ பாவலா,
குடீஸஹித ஜாலா குப்த துகா".
(எல்லோரும் எனக்கு விடை கொடுத்து விட்டு, வீட்டிற்குச் செல்லுங்கள். வைகுண்டத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. விடோபா எனக்காக வெகு நேரமாகக் காத்திருக்கிறான். நான் போகிறேன், "என்னை ஆசீர்வதிக்க வேண்டும்", என எல்லோரிடமும் நான் கொண்டதாகச் சொல்லுங்கள். கடைசியில் விடா எனக்குக் கிடைத்து விட்டான். துகாவாகிய நான் இப்போது தேஹத்துடன் மறைகிறேன்).
பகவானின் நாமத்தை ஸ்மரித்துக்கொண்டே துகோபா சரீரத்துடன் மறைந்து விட்டார். இதைப் பற்றிய சரித்திரச் சான்றுகள் உள்ளன.
"சகே பந்தராசே ஏகாஹத்தரீ,
விரோதீ நாம ஸம்வத்ஸரீ,
பால்குன வத்ய த்விதீயா ஸோமவாரீ(ம்),
பிரதம ப்ரஹரி ப்ரயாண கேலே(ம்)". (௨)
"துகோபா கோஸாவீ வைகுண்டாஸ கேலே,
ஸ்வதேஹீநிசீ கேலே".
பாளோஜீ தேலீ ஜகனாடே, தன்னுடைய குறிப்புகளில், 216ம் பக்கத்தில், "துகோபா தேஹத்துடன் வைகுண்டத்திற்கு ஆரோஹணித்தார்", என்று எழுதியுள்ளார். துகோபா மறைவதை, ஸந்தாஜீ ப்ரத்யக்ஷமாகப் பார்த்தவர்.
மஹாராஜின் மறைவினால் பக்த மண்டலியினர் எல்லோரும் சோக ஸாகரத்தில் மூழ்கினார்கள். மஹாராஜின் புதல்வர்கள், ஸஹோதரர், சிஷ்யர்கள் முதலானோர், அந்த இடத்தை விட்டு நீங்காமல் உட்கார்ந்திருந்தார்கள். ஐந்து நாட்கள் கழித்து, மஹாராஜின் தாளமும், கடிதமும், காகிதங்களும் ஆகாய மார்கமாக வந்திறங்கின. ராமேஸ்வர சாஸ்த்ரி, "துகோபா தேஹத்துடன் வைகுண்டம் சென்றுவிட்டார்", என்று உறுதியாகச் சொன்னார்.
பின், எல்லோரும் ஸ்நானம் செய்தார்கள். மஹாராஜின் புத்திரர்களும், ஸஹோதரர் கான்ஹோபாவும், பகவானிடம், "தெய்வமே! என்னுடைய அண்ணனைத் திரும்பவும் கொடு. வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லாதே", என்று சண்டையிட்டனர். அப்போது, பகவான் வந்து, கான்ஹோபாவை ஸமாதானம் செய்தான்.
ஸ்ரீ துகாராம் மஹாராஜிற்குப்பின்
துகாராம் மஹாராஜ் தேஹத்துடன் வைகுண்டம் சென்ற விஷயத்தைக் கேட்டு, சிவாஜி ராஜா ஆச்சர்யமடைந்தார். அவர், தேஹுவிலிருந்த ஜானோஜீ போஸலேயிடம் மஹாராஜின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அவரிடம், மஹாராஜின் மூத்த புதல்வர் மஹாதேவைக் கண்டு, அழைத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதன்படி, ஜானோஜி மஹாதேவ்பாபாவைக் கண்டு, அவரைக் கூட்டிக்கொண்டு, சிவாஜி ராஜாவிடம் போனார். சிவாஜி, துகாராம் மஹாராஜின் குடும்பத்திற்கு வருஷத்திற்கு ஒரு கண்டி (ஒரு அளவு) தான்யமும், வஸ்த்ரங்கள் வாங்க ஒரு சவரன் பொன்னும் கிடைக்க சாஸனம் செய்து கொடுத்தார். சிவாஜி ராஜாவின் புதல்வர் ஸம்பாஜி ராஜாவாலும் இது தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது.
மஹாராஜ் வைகுண்டம் சென்ற ஸமயம், அவர் பத்னி ஜீஜாபாய் கர்ப்பவதியாக இருந்தார். அதன் பின்னர்தான் நாராயண் மஹாராஜ் (1650–1723) பிறந்தார். அவர் ஞானதேவ் மஹாராஜின் அவதாரமானதால், இரண்டு மூத்த ஸஹோதரர்களும், அவரை அனுஸரித்து நடந்து வந்தார்கள். தாயார் ஜீவிதராக இருந்தவரை எல்லோரும் சேர்ந்தே இருந்தனர். ஜீஜாபாய் காலகதி அடைந்தவுடன், விட்டல்புவாவும், நாராயணபுவாவும் அவருடைய அஸ்தியை எடுத்துக்கொண்டு, ஒரு பெரும் யாத்திரையை மேற்கொண்டார்கள். மஹாதேவ்புவா, ஸ்ரீ விட்டலன் கோவில் பூஜை, அர்ச்சனை முதலிய நித்திய நியமங்களைக் கவனித்து வந்தார். அவர் துகோபாவின் அபங்கங்களையும் எழுதி வந்தார்.
(திரும்பி வந்த) நாராயண்புவா ராஜ தோரணையில், பகட்டாக வாழ ஆரம்பித்தார். அவரைக் காண வந்த ஸந்தாஜீ பவார், அவர் அப்படி வாழ்வதைப் பற்றிக் கடிந்து கொண்டார். உடனே நாராயணபுவா, தன்னுடைய வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் பிராமணர்களை எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, தவம் மேற்கொண்டார். விடோபாவிற்கு ஒரு அழகிய கோவிலையும் நிர்மாணித்தார்.
"துகாராம் தோ ஆதீ(ம்)ச கேலே ஹோதே(ம்) வைகுண்டா,
பஹு திவஸா(ம்)னீ மக வைராக்ய ஜாலே(ம்) நீளகண்டா." (௧)
"துகயாசா நந்தன மாகே(ம்) நாராயணபாபா,
தர்சன த்யாசே கேவூனி ம்ஹணதி ஸுஸங்க லாபாவா." (௨)
(துகாராம் முன்பே வைகுண்டம் சென்று விட்டார். அதற்குப் பல நாட்களுக்குப் பின்னர், நீலகண்டர் உலகைத் துறந்து விட்டார். பிறகு, ஜனங்கள் தரிசனத்திற்கும், ஸத்ஸங்கத்திற்கும் நாராயணபுவாவை நாடினார்கள்).
நிளோபா கோஸாவீ பிம்பளனேர்கர் பாபாவின் தரிசனத்திற்காக வந்தார். பாபா, அவருக்கு துகாராம் மஹாராஜின் சரித்ரத்தை, முதலிலிருந்து கடைசிவரை, விரித்துரைத்தார். அவர் நிளோபாவுடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார். நிளோபா துகோபாவின் தரிசனத்திற்காக 42 நாட்கள் விரதம் கைக்கொண்டு, அவருடைய தரிசனம் கிடைக்கப் பெற்றார்.
"யேவூனியா(ம்) க்ருபாவந்தே,
துகயா ஸ்வாமீ ஸத்குருநாதே(ம்)," (௧)
"ஹாத டேவிலா மஸ்தகீ(ம்),
தேவூனீ ப்ரஸாத கேலே ஸுகீ." (௨)
அதன்பின், நிளோபாவிற்குக் கவி புனையும் திறமை உண்டாயிற்று. அவரும் அனேக அபங்கங்கள் இயற்றியுள்ளார். பல சரித்திரச் சான்றுகளில், நாராயணபுவா பெரும் தபஸ்வி என்றும், ஹரிபக்தர் என்றும் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. பாபாவின் தரிசனத்திற்காக கூட்டம் கூடியது. ‘துகாராம் பீஜ்’ உற்ஸவம் அவரால் தொடங்கப்பட்டது.
பாபா, அந்த ஸமயங்களில் வந்திருக்கும் அனைவருக்கும் அன்னதானம் செய்தார். அதற்காக சத்ரபதி ராஜாராம் மஹாராஜ் அவருக்கு ‘யேலவாடி’ என்ற கிராமத்தை (1692ல்) இனாமாக அளித்தார். பின்னர், பகவானின் மஹோத்ஸவத்திற்காகவும், பூஜை, அர்ச்சனைக்காகவும், அன்னதானத்திற்காகவும் தேஹு, கின்ஹை ஆகிய இரு கிராமங்களும் இரண்டாவது சிவாஜி மற்றும் ஷாஹு மஹாராஜ் ஆகியோரிடமிருந்து கிடைத்தன.
ஷாஹு மஹாராஜும், ராணி ஸரவராபாயும் பாபாவை குருவாக மதித்தார்கள். ஆஷாட வாரி ஸமயத்தில் துகாராம் மஹாராஜின் ‘பால்கி’ (பல்லக்கு) உற்ஸவம் ஆரம்பித்ததுவும் நாராயண மஹாராஜே. பாபாவினால் தேஹு கோவிலுக்குக் கீர்த்தி உண்டாயிற்று, வாரகரி ஸம்பிரதாயமும் வளர்ந்தது.
ஔரங்கஜீப் மஹாராஷ்ட்ராவிற்கு வந்தபோது, பண்டரீபுரம் மற்றும் ஷிங்கணாபுர் ஆகிய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை போவதில் ஏற்பட்ட இடஞ்சல்களை நீக்கினார். பாபா சக வருஷம் 1645 ஸ்ரவண சுத்த சதுர்த்தியில் வைகுண்ட வாஸியானார். மஹாதேவபாபாவின் புத்திரர் ஆபாஜிபாபா, அவருடைய அஸ்தியை கரைப்பதற்காக காசிக்கு யாத்திரை சென்றார்.
ஆபாஜிபாபா, கங்கா ஜலத்தை காவடி கட்டித் தூக்கிக்கொண்டு, தேஹு திரும்பினார். இதற்கிடையில், ஷாஹு மஹாராஜிடம் இருந்து வந்த, விட்டல்பாபாவின் புதல்வர் உத்தவ்பாபா, தேஹுவிற்கு திரும்பிச் சென்றார். அவர் தேஹு தேவாலயத்தின் நிர்வாகத்தைக் கையில் எடுத்து, நடத்த ஆரம்பித்தார். அவர், ஆபாஜிபாபாவிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க மறுத்துவிட்டார்.
ஆபாஜிபாபா ஒரு வைராக்ய சீலராகவும், தபஸ்வியாகவும், ஹரி பக்தராகவும் விளங்கினார். ஆபாஜிபாபாவிற்குப் பின் அவரது புத்திரர் மஹாதேவ்பாபாவும் கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்ற சண்டையிட்டார். இது ‘யார் பெரியவர்?’ என்ற சண்டையாகும்; நிர்வாகத்தை பற்றியதல்ல. இந்தச் சண்டையில் அரசாங்கமும் தலையிடவில்லை.
ஆகையால், மஹாதேவ்பாபா தேஹுவை விட்டுவிட்டு, பகவானுக்காகவும், வாரகரி ஸம்பிரதாயத்திற்காகவும் பண்டரிபுரத்திற்குச் சென்று, வஸித்தார். அவர் துகாராம் மஹாராஜின் அபங்கங்களைத் திரட்டிச் சேகரித்து, ஒரு ‘காதா’ (அபங்கங்கள் அடங்கிய புஸ்தகம்) தயார் செய்தார். அவர் தேஹுகர் ஸம்பிரதாயத்தைச் செழித்து வளரச் செய்தார்.
அவருடைய புதல்வர் வாஸுதேவ் மஹாராஜ் தேஹுகரும் வாரகரி ஸம்பிரதாயத்திற்கு பெரும் தொண்டாற்றினார். அவருடைய காலத்தில் வாரகரி ஸம்பிரதாயத்தைச் சேர்ந்த பல ‘படங்கள்’ (வாரகரி யாத்திரையில் பங்கேற்கும் குழுக்கள்) தோன்றி நன்கு வளர்ந்தன. கர்நாடகா வரை இந்த ஸம்பிரதாயம் பரவிற்று.
இந்த பரம்பரையில் தோன்றிய துகாராம் மஹாராஜின் பேரனின் பேரன் கோபால்புவாவும் ஒரு ஸாக்ஷாத்காரி (இறையருள் உடையவர்).
துகாராம் மஹாராஜின் சரித்திரத்தை எழுதியதே, இவர் ஆற்றிய பெரும் தொண்டாகும். தேஹு ஸமஸ்தான் பாரம்பரிய ஸம்பிரதாயமான ஆஷாடி, கார்த்திகி பால்கி ஸேவையை இன்று வரையும், இடைவிடாது, நடத்தி வருகிறது. தேஹுகர் மண்டலி, கிராமம் தோறும் கதை, கீர்த்தன் நிகழ்ச்சிகள் நடத்தி, வாரகரி ஸம்பிரதாயத்தை வளர்த்து வருவதன் மூலம் ஸம்பிரதாயத்திற்கும், குலதெய்வத்திற்கும் விலை மதிப்பற்ற தொண்டாற்றி வருகிறது.
"அம்ருதாசீ பளே(ம்) அம்ருதாசே வேலீ,
தேசீ புடே(ம்) சாலீ பீஜாசிஹி," (௧)
"ஹே மஹாராஜா(ம்)சே(ம்) வசன ஸார்த
கரூன் தாக்கவீத் ஆஹேத்."
அமிர்தத்தின் பழமும், அமிர்தத்தின் கொடியும் விதையாலேயே தோன்றிப் பரவுகிறன. அவர்கள் (மஹாராஜின் வழித் தோன்றல்கள்), மஹாராஜின் வார்த்தையை நிறைவேற்றிக் காண்பிக்கிறார்கள்.
- ஹரி பக்த பராயண. ஸ்ரீதர் மஹாராஜ் தேஹுகர்
ஸ்ரீ துகோபாராய் ஜன்மஸ்தான், ஸ்ரீ க்ஷேத்ர தேஹு.
உலக இலக்கியத்தில

ஸ்ரீ திலீப் புருஷோத்தம் சித்ரேயால் மொழிபெயர்க்கப்பட்ட, கீழ்க்கண்ட துகோபாவின் ஒன்பது அபங்கங்கள், லாங்மன்ஸின் "The Longman Anthology of World Literature Volume C – The Early Modern Period" என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
லாங்மன்ஸின் ‘உலக இலக்கியத் திரட்டு’ (Anthology of World Literature) என்ற தொகுப்பிலிருந்து சில வரிகள்:
பதிப்பாசிரியரின் குறிப்பு – டேவிட் தாம்ரோச்:
வெவ்வேறு வகையான படைப்புகள் பல சமயங்களில், பல இடங்களில், இலக்கியமாக மதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, பின்னர் வந்த இலக்கியங்களுக்கு முன்னோடியாகத் திகழும் கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் பொருட்செறிவுள்ள சரித்திர, சமூகவியல், வேதாந்த நூற்களின் குறிப்பிட்ட பகுதிகள் முதலியவற்றை இந்த இலக்கியத் திரட்டில் சேர்த்துக் கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறோம்.
உலகப் புகழ் பெற்றது என்பதற்காகவோ அல்லது சமீபத்தில் கண்டறியப்பட்டது என்பதற்காகவோ ஒரு தனிப்பட்ட விஷயத்தை மட்டும் எடுத்துக் காட்டும் எந்தப் பகுதியும் இதில் சேர்க்கப்படவில்லை – இவைகள் நிச்சயமாகப் படிக்கத் தூண்டுபவையே.
பதினேழாவது நூற்றாண்டின் முற்பகுதியில், மேற்கு இந்தியாவில் வாழ்ந்து மராட்டி மொழியில் பாடல்கள் இயற்றிய துகாராம், பல கவிகளின் இலக்கிய முயற்சிக்கு ஊக்கம் கொடுத்தவர் ஆவார். தன்னைப் பற்றிக் கூறும் பாடல் ஒன்றில், “எனக்கென்று சொந்தமாக எந்தத் திறமையும் கிடையாது. என்னைப் பேசவைப்பது ஸர்வவியாபியே (பகவானே)” என்று வியந்து கூறுகிறார்.
ஸ்ரீ திலீப் புருஷோத்தம் சித்ரே அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது: துகாராம், மத்திய இந்தியாவில், தற்பொழுது மஹாராஷ்ட்ரா என வழங்கப்படும் மாநிலத்தில், ஒரு கிராமத்தில், நிலம் படைத்த விவசாயிகளான பெற்றோர்களுக்குப் பிறந்தவர். அவருக்கு இருபது வயது ஆவதற்கு முன்பே, பஞ்சமும் நோயும் அவருடைய பெற்றோர்களையும், இரு மனைவியரில் ஒருவரையும் பறித்தன. அப்போது அவர் இவ்வுலகைத் துறந்தவரானார்.
மிகவும் தனித்தன்மை வாய்ந்த அவருடைய பாடல்கள், மஹாராஷ்ட்ராவில் பண்டரிபுரத்திலுள்ள “விட்டல்” என்ற பெயரால் வணங்கப்படும் விஷ்ணுவின் மீது பாடப்பட்டவை.
நாம்தேவ் மஹாராஜும் பாண்டுரங்கனும் துகோபாவின் கனவில் வந்து, அபங்கம் பாடும்படி ஆக்ஞாபித்தல்:
(௧)
நாமதேவே(ம்) கேலே(ம்) ஸ்வப்னாமாஜீ ஜாகே(ம்),
ஸவே(ம்) பாண்டுரங்கே(ம்) யேவூனியா(ம்). (௧)
ஸாங்கிதலே(ம்) காம கராவே(ம்) கவித்வ,
வாவுகே(ம்) நிமித்ய போலோ(ம்) நகோ. (த்ரு)
மாப டாகீ ஸள தரிலீ விட்டலே(ம்),
தாபடோனீ கேலே(ம்) ஸாவதான. (௨)
ஸாங்கிதலே(ம்) காம கராவே(ம்) கவித்வ,
வாவுகே(ம்) நிமித்ய போலோ(ம்) நகோ. (த்ரு)
ப்ரமாணாசீ ஸங்க்யா ஸாங்கே சத கோடீ,
உரலே தே சேவடீ(ம்) லாவீ துகா. (௩)
ஸாங்கிதலே(ம்) காம கராவே(ம்) கவித்வ,
வாவுகே(ம்) நிமித்ய போலோ(ம்) நகோ. (த்ரு)
துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார்: "விட்டலன், நாமதேவருடன் எனது கனவில் வந்து என்னை எழுப்பி, 'அபங்கம் இயற்றும் காரியத்தைச் செய்வாயாக; மற்ற வீணானவற்றைப் பேச வேண்டாம்' என்று சொன்னான். விட்டலன், இயற்ற வேண்டிய அபங்கங்களின் எண்ணிக்கையைப் பற்றியும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கவனப்படுத்தினான். நூறு கோடி அபங்கங்களில் (நாம்தேவ் இயற்றியதைத் தவிர) மீதியை நான் இயற்றி, பூர்த்தி செய்தேன்."
(௨)
த்யால டாவ தரீ ராஹேன ஸங்கதீ,
ஸந்தாஞ்சே பங்கதீ பாயாபாசீ. (௧)
ஆவடீசா டாவ ஆலோஸே டாகூன,
ஆதாம் உதாஸீன ந தராவே. (த்ரு)
சேவடீல ஸ்தள நீச மாஜீ வ்ருத்தி,
ஆதாரே விஸ்ராந்தீ பாவயீன. (௨)
ஆவடீசா டாவ ஆலோஸே டாகூன,
ஆதாம் உதாஸீன ந தராவே. (த்ரு)
நாமதேவாபாயீ துக்யா ஸ்வப்னீ பேடீ,
ப்ரஸாத ஹா போடீ ராஹிலாஸே. (௩)
ஆவடீசா டாவ ஆலோஸே டாகூன,
ஆதாம் உதாஸீன ந தராவே. (த்ரு)
துகோபா கூறுகிறார்: "(ஸந்த)சங்கத்தில் இருக்க இடம் அருளியதால், உன்னைப் போல ஸந்துக்களின் வரிசையில், அவர்களுடைய சரணங்களுக்கு பக்கத்தில் இருப்பேன். நான், எனக்கு இஷ்டமான இடத்தை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறேன். இப்போது என்னை உதாஸீனம் செய்யாதே. (சமூகத்தில்) எனது இடம் கீழானது, சக்தியும் அல்பமானது. ஆனால் உனது ஆதாரத்தினால் எனக்கு நிம்மதி உண்டாகும். கனவில் நாம்தேவின் சரணங்களைத் தரிசித்ததால் எனக்கு அபங்கம் இயற்றும் பிரஸாதம் கிடைத்தது."
(௩)
கரூம் கவித்வ ஆதாம் காய நாஹீ லாஜ,
மஜ பக்தராஜ ஹாஸதீல. (௧)
ஆதாம் ஆலா ஏகா நிவாட்யாசா திஸ,
ஸத்யாவிண ரஸ விரஸலா. (த்ரு)
அனுபவாவிண கோண கரீ பாப,
ரிதேசி ஸங்கல்ப லாஜவாவே. (௨)
ஆதாம் ஆலா ஏகா நிவாட்யாசா திஸ,
ஸத்யாவிண ரஸ விரஸலா. (த்ரு)
துகா ம்ஹணே ஆதாம் ந தரவே தீர,
நவ்ஹே ஜீவ ஸ்திர மாஜா மஜ. (௩)
ஆதாம் ஆலா ஏகா நிவாட்யாசா திஸ,
ஸத்யாவிண ரஸ விரஸலா. (த்ரு)
துகாராம் மஹாராஜ் கூறுகிறார்: "தேவா! உன்னை அடையும் அனுபூதி இல்லாத அபங்கங்களைப் பாட என்னால் வெட்கப்படாமல் இருக்க முடியுமா? அப்படிப்பட்ட பாடல்களைப் பாடினால், பக்தராஜர்கள் என்னைப் பரிகசிப்பார்கள். இப்போது அதற்கு ஒரு முடிவு வரும் நாள் வந்துவிட்டது. தெய்வ அனுபவமில்லாத கவிதை ரஸம் விரஸமாகும். அனுபவமில்லாத கவிதை செய்வது பாவமே. மனத்தில் தோன்றும் கவிதை எண்ணங்களுக்கே வெட்கப்பட வேண்டும். எனக்குப் பகவானின் உணர்வு இல்லாமல், (தைத்துவமுள்ள) கவிதை இயற்றும் மன உறுதி இருக்க முடியாது."
(௪)
பாவாவேம் ஸந்தோஷ,
தும்ஹீ யாஸாடீம் ஸாயாஸ. (௧)
கரீம் ஆவடீ வசனேம்,
பாலடூனீ க்ஷணக்ஷணேம். (த்ரு)
த்யாவேம் அபயதான,
பூமீம் ந படாவேம் வசன. (௨)
கரீம் ஆவடீ வசனேம்,
பாலடூனீ க்ஷணக்ஷணேம். (த்ரு)
துகா ம்ஹணே பரஸ்பரேம்,
காம் ஹீம் வாடவீம் உத்தரேம். (௩)
கரீம் ஆவடீ வசனேம்,
பாலடூனீ க்ஷணக்ஷணேம். (த்ரு)
துகோபா கூறுகிறார்: "தேவா! நீ ஸந்தோஷம் அடையவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த அபங்கங்களை பாடுகிறேன். உனக்குப் பிரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நொடியும் எதையாவது மாற்றியமைத்து, பலவிதமாகப் பாடுகிறேன். இந்த வார்த்தைகள் வீணாக மண்ணில் விழாமல் தங்கட்டும் என்று அபயதானம் அளிக்க வேண்டும். நாம் இருவருக்கிடையில் பரஸ்பரமாக ஏதாவது பாசப் பிணைப்பு மலரட்டும்."
(௫)
காம் ஹீம் ச ந லகே ஆதி அவஸான,
பஹுத கடிண திஸதஸாம். (௧)
அவக்யாச மாஜ்யா வேஞ்சவில்யா சக்தி,
ந சலேஸீ யுக்தி ஜாலீ புடேம். (த்ரு)
போலிலேம் வசன ஹாரபலேம் நபீம்,
உதரலோம் தோம் உபீம் ஆஹோம் தைஸீம். (௨)
அவக்யாச மாஜ்யா வேஞ்சவில்யா சக்தி,
ந சலேஸீ யுக்தி ஜாலீ புடேம். (த்ரு)
துகா ம்ஹணே காம் ஹீம் ந கராவேம் சேம் ஜாலேம்,
தகிதசி டேலேம் சித்த உகேம். (௩)
அவக்யாச மாஜ்யா வேஞ்சவில்யா சக்தி,
ந சலேஸீ யுக்தி ஜாலீ புடேம். (த்ரு)
துகோபா சொல்லுகிறார்: "தேவா! ஆதியிலிருந்து அந்தம் வரை முயற்சி செய்தேன், ஆனால் உனது பதிலை உணர முடியவில்லை. நீ மிகவும் கடினமான சித்தம் கொண்டவனாகத் தெரிகிறாய். என்னுடைய எல்லா சக்திகளும் முடிந்துவிட்டன. எந்தவொரு யுக்தியும் உன்னிடம் பயனளிக்கவில்லை. நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் வீணாகிப் போயின. உன் அருகில் நின்ற நான் முந்தையபடியே இருக்கிறேன். நீ எதுவும் செய்யாததால் என் மனம் அதிர்ச்சியடைந்து, வார்த்தைகள் வராமல் போய்விட்டன."
(௬)
கரிதோம் கவித்வ ம்ஹணால ஹேம் கோணீ,
நவ்ஹே மாஜீ வாணீ பதரீம் சீ. (௧)
மாஜீயே யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,
மஜ விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
காய மீ பாமர ஜாணேம் அர்தபேத,
வதவீ கோவிந்த தேம் சி வதேம். (௨)
மாஜீயே யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,
மஜ விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
நிமித்த மாபாஸீ பைஸவிலோம் ஆஹேம்,
மீ தோம் காஹீம் நவ்ஹே ஸ்வாமிஸத்தா. (௩)
மாஜீயே யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,
மஜ விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
துகா ம்ஹணே ஆஹேம் பாயீகசி கரா,
வாகவிதா முத்ரா நாமாசீ ஹே.
மாஜீயே யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,
மஜ விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
துகாராம் மஹாராஜ் கூறுகிறார்: “நான் கவிதை எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். இது என் சொந்த யுக்தியால் உண்டான கவித்துவம் அல்ல. என் வாயிலே பேசுகிறவனே விஷ்வம்பரன் — உலகைப் போஷிப்பவன். பாமரனான எனக்கு சாஸ்திர அர்த்தங்களை எப்படி அறிவது? கோவிந்தன் சொல்லும்படி நான் சொல்கிறேன். நான் இந்த அபங்கங்களை எண்ணிக்கைக்காக எழுதவைக்கப்பட்டுள்ளேன். இது ஸ்வாமியின் ஸங்கல்பத்தின் விளைவே. நான் அவனது உண்மையான தாஸனாக இருந்து, அவன் நாமம் கொண்ட முத்திரையை பசுமையாகக் கொண்டுள்ளேன்.”
(௭)
நாஹீம் ஸரோம் யேத ஜோடில்யா வசனீம்,
கவித்வாசீ வாணீ குஷளதா. (௧)
ஸத்யாசா அனுபவ வேதீ ஸத்யபணேம்,
அனுபவாச்யா குணேம் ருசோம் யேதேம். (த்ரு)
காய ஆகீபாஷீம் ஸ்ருங்காரிலேம் சாலே,
போடீம் சேம் உகலே கஸாபாசீம். (௨)
ஸத்யாசா அனுபவ வேதீ ஸத்யபணேம்,
அனுபவாச்யா குணேம் ருசோம் யேதேம். (த்ரு)
துகா ம்ஹணே யேதேம் கராவா உகல,
லாகேசி நா போல வாடவூனி.
ஸத்யாசா அனுபவ வேதீ ஸத்யபணேம்,
அனுபவாச்யா குணேம் ருசோம் யேதேம். (த்ரு)
துகாராம் மஹாராஜ் கூறுகிறார்: “வார்த்தைகளை மட்டும் கவர்ச்சிகரமாகச் சேர்த்து, கவிதையாக உண்டாக்கினால் அது உண்மையான பக்திக் கவிதையாகாது. அந்தக் கவிதையில் அனுபவ உண்மை இருக்க வேண்டும். அனுபவத்தின் மூலம் வரும் உண்மை தான் உண்மையான ருசியை தரும். ஒருவரால் தூய தங்கத்தை போல சித்த அனுபவத்தை வெளியிட முடியுமானால், வெளி மின்னும் சொற்பழக்கங்கள் எல்லாம் விலகிப் போய்விடும். சத்திய அனுபவம் உடையவர் எதையும் விளங்கச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அந்த அனுபவமே அவருக்குப் பேச்சாகும்.”
(௮)
பாப மேலா ந களதா(ம்),
நவ்ஹதீ சம்ஸாராசீ சிந்தா. (௧)
விடோ துஜே(ம்) மாஜே(ம்) ராஜ்ய,
நாஹீ(ம்) துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
பாயீல மேலீ முக்த ஜாலீ,
தேவே(ம்) மாயா ஸோடவிலீ. (௨)
விடோ துஜே(ம்) மாஜே(ம்) ராஜ்ய,
நாஹீ(ம்) துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
போர மேலே(ம்) பரே(ம்) ஜாலே(ம்),
தேவே(ம்) மாயாவிரஹித கேலே(ம்). (௩)
விடோ துஜே(ம்) மாஜே(ம்) ராஜ்ய,
நாஹீ(ம்) துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
மாதா மேலீ மஜ தேகதா(ம்),
துகா ம்ஹணே ஹரலீ சிந்தா. (௪)
விடோ துஜே(ம்) மாஜே(ம்) ராஜ்ய,
நாஹீ(ம்) துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
துகாராம் மகாராஜ் சொல்லுகிறார், "எனக்கு உலகத்தைப் பற்றிய சிந்தனை இல்லாத போது (சிறு வயதில்) எனது தந்தை இறந்ததால், அது எனக்குத் தெரியாது. விட்டலா! இப்போது, உனதும் எனதுமே ராஜ்ய. வேறு வேலை எதுவும் கிடையாது. பத்னி காலமாகி, விடுதலை அடைந்தாள். பகவான் என்னை மாயையிலிருந்து நீக்கினான். புதல்வன் மரித்தான். (ஒரு வகையில்) அதுவும் நல்லதாயிற்று. பகவான் எனக்கு மாயை இல்லாமல் செய்துவிட்டான். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தாயார் காலமானாள். பகவான் என்னுடைய ஸகல கவலைகளையும் போக்கிவிட்டான்".
(௯)
(ஸந்துக்கள் துகாரம் மகாராஜிடம் "உங்களுக்கு வைராக்கியம் எப்படி வந்தது", என்று கேட்டபோது அவர் அளித்த பதில்).
யாதீ சூத்ர வம்ச கேலா வேவஸாவ,
ஆதி தோ ஹா தேவ குளபூஜ்ய. (௧)
நயே போலோ(ம்) பரிபாளிலே(ம்) வசன,
கேலியாசா பிரஸ்ன து(ம்)ஹீ(ம்) ஸந்தீ(ம்). (௨)
ஸம்வஸாரே(ம்) ஜாலோ(ம்) அதிது:கே(ம்) து:கீ,
மாயபாப சேகீ(ம்) க்ரமிலியா. (௩)
துஷ்காளே(ம்) ஆடிலே(ம்) த்ரவ்ய நேலா மான,
ஸ்த்ரீ ஏகீ அன்ன அன்ன கரிதா(ம்) மேலீ. (௪)
லஜ்ஜா வாடே ஜீவ த்ராஸலோ(ம்) யா து:கே(ம்),
வேவஸாவ தேகே(ம்) துடீ யேதா(ம்). (௫)
தேவாசே(ம்) தேவுள ஹோதே(ம்) ஜே(ம்) பங்கலே(ம்),
சித்தாஸீ தே(ம்) ஆலே(ம்) கராவே(ம்)ஸே(ம்). (௬)
ஆரம்பீ(ம்) கீர்தன கரீ(ம்) ஏகாதசீ,
நவ்ஹதே(ம்) அப்யாஸீ(ம்) சித்த ஆதீ(ம்). (௭)
காஹீ(ம்) பாட கேலீ(ம்) ஸந்தா(ம்)சீ(ம்) உத்தரே(ம்),
விஸ்வாஸே(ம்) ஆதரே(ம்) கரோனியா(ம்). (௮)
காதீ புடே(ம்) த்யா(ம்)சே(ம்) தராவே(ம்) த்ருபத,
பாவே(ம்) சித்த சுத்த கரோனியா(ம்). (௯)
ஸந்தா(ம்)சே(ம்) ஸேவிலே(ம்) தீர்த பாயவணீ,
லாஜ நஹீ(ம்) மனீ(ம்) யேவூ(ம்) திலீ. (௧0)
டாகலா தோ கா(ம்)ஹீ(ம்) கேலா உபகார,
கேலே(ம்) ஹே(ம்) சரீர கஷ்டவூனீ. (௧௧)
வசன மானிலே(ம்) நாஹீ(ம்) ஸுஹ்ருதா(ம்)சே(ம்),
ஸமூள ப்ரபஞ்சே(ம்) வீட ஆலா. (௧௨)
ஸத்ய அஸத்யாஸீ மன கேலே(ம்) க்வாஹீ,
மானியேலே(ம்) நாஹீ(ம்) பஹுமதா(ம்). (௧௩)
மானியேலா ஸ்வப்னீ(ம்) குரூசா உபதேச,
தரிலா விச்வாஸ த்ருட நாமீ(ம்). (௧௪)
யாவரீ யா ஜாலீ கவித்வாசீ ஸ்பூர்தி,
பாய தரிலே சித்தீ(ம்) விடோபாசே. (௧௫)
நிஷேதாசா கா(ம்)ஹீ(ம்) படிலா ஆகாத,
தேணே(ம்) மத்யே(ம்) சித்த து:கவிலே(ம்). (௧௬)
புடவில்யா பஹ்யா பைஸலோ(ம்) தரணே(ம்),
கேலே(ம்) நாரயணே(ம்) ஸமாதான. (௧௭)
விஸ்தாரீ(ம்) ஸாங்கதா(ம்) பஹுத ப்ரகார,
ஹோயீல உசீர ஆதா(ம்) புரே. (௧௮)
ஆதா(ம்) ஆஹே தைஸா திஸதோ விசார,
புடீல ப்ரகார தேவ ஜாணே. (௧௯)
பக்தா(ம்) நாராயண நுபேக்ஷீ ஸர்வதா,
க்ருபாவந்த ஐஸா களோ(ம்) ஆலே(ம்). (௨0)
துகா ம்ஹணே மாஜே(ம்) ஸர்வ பாண்டவல,
போலவிலே போல பாண்டுரங்கே(ம்). (௨௧)
துகாரம் மஹாராஜ் கூறுகிறார், "எனது ஜாதி சூத்திர வம்சம், தொழில் வியாபாரம், முதலிலிருந்தே குலத்திற்குத் தெய்வமாக இருப்பவனைப் (விட்டலனை) பூஜித்து வருகிறேன். (௧) நானே என் வரலாற்றை யாருக்கும் சொல்லுவதில்லை. ஸந்துக்களாகிய நீங்கள் கேட்டதால், உங்களுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். (௨) நான் இப்பிரபஞ்சத்தில், துக்கத்தின் அதிதுக்கத்தை அனுபவித்திருக்கிறேன். தாய், தந்தையர் உலகை விட்டுப் போய்விட்டனர். (௩) பஞ்சபதினாலும், பணத்தினாலும், மானமும் இழந்து விட்டேன். (௪) மனைவியும் காலமானாள், அது என்னை மிகுந்த வெட்கத்துக்கும், பயத்துக்கும் உட்படுத்தியது. (௫) என் வாழ்க்கை பயங்கரமாகி விட்டது; எனது வியாபாரம் சரியாய் செல்லவில்லை. (௬) இதுவே எனக்கு வைராக்கியத்தின் ஆரம்பமாகிவிட்டது."
விட்டலனின் ஆலயம் பழுதடைந்து போய் விட்டது. அதைப் புதுப்பிக்க வேண்டும் என்று மனதில் பட்டது. (௬) ஆரம்பத்தில், ஒருநாள் கீர்த்தன் செய்தேன். முதலில் பயிற்சியில் மனம் நாடவில்லை. (௭) ஸந்துக்களின் வசனத்தில் நம்பிக்கை வைத்து, பக்தியுடன் (அவ்வசனங்களைப்) படித்தேன். (௮) அதன் பின், சித்தத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டு, பாவத்துடன் அவர்களின் த்ருபதங்களை (பல்லவிகளை) பாடினேன். (௯) ஸந்துக்களின் பாத தீர்த்தத்தைப் பருகினேன். அதனால், மனதில் வெட்கம் போய்விட்டது. (௧0)
என் சரீரத்தைக் கஷ்டப் படுத்திக்கொண்டு, ஏதோ (மற்றவர்களுக்கு) உபகாரம் செய்தேன். (௧௧) நெருங்கியவர்கள் (மற்றவர்களைப் போல இரு என்று) சொன்னதை, நான் மதிக்கவில்லை. மொத்த பிரபஞ்சத்தின் மீதும் வெறுப்பு வந்தது. (௧௨) நல்லது எது? கெட்டது எதுவென்ற விஷயத்தில் நான் உலகத்தினரின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. என் மனதில் பட்டதையே ஸாக்ஷியாகக் கொண்டேன். (௧௩) சொப்பனத்தில் குரு செய்த உபதேசத்தை மதித்து, அந்த நாமத்தில் திடமான நம்பிக்கை வைத்தேன். (௧௪) அதன் பின்னர், கவி புனையும் ஆற்றல் (விட்டோபாவின் அருளினால்) கிடைத்தது. நான் விடோபாவின் சரணங்களில் மனதை பதித்துக் கொண்டேன். (௧௫)
எனது அபங்கங்கள் நிந்திக்கப் பட்டு, ஆபத்து ஏற்பட்டது. அதனால் மனம் துயருற்றேன். (௧௬) (நான் இயற்றிய அபங்கங்கள் எழுத்தப்பட்ட) புஸ்தகங்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டன. நான் ’தர்ணா’வில் அமர்ந்தேன். (அவற்றை ரக்ஷித்து) நாராயணன் என்னை ஸமாதானப் படுத்தினான். (௧௭) (இந்த விஷயங்களை) இன்னும் பலபடியாக விஸ்தரித்துக் கூறினாலும், பின்னும் மீதி இருக்கும். ஆகையால், இப்போது நிறுத்திக் கொள்வோம். (௧௮) இப்போதுள்ள நிலமை தெரிகிறது. ஆனால், மேற்கொண்டு நடக்கப் போவதை பகவானே அறிவான். (௧௯) நாராயணன் தன் பக்தர்களை ஒருபொழுதும் அசட்டை செய்ய மாட்டான். அவன் கிருபாவந்தன் என்பதை நான் தெரிந்து கொண்டேன். (௨0) பாண்டுரங்கனே எனது பொக்கிஷம், அவன் தனது வாக்குகளை என் வாயால் சொல்ல வைக்கிறான். (௨௧)
"துகாரம் மகாராஜின் ’காதா’ (அபங்கங்களின் தொகுப்பு), அர்த்த புஷ்டியுள்ள, ஒரு மஹோன்னதமான படைப்பாகும். அவருடைய இலக்கியப் படைப்புகள் மனித சமுதாயத்தின் முடிவற்ற இலக்கியதாகத்திற்குக் கிடைத்த ஒரு நிபுணத்துவம் வாய்ந்த, பாரம்பரிய சொத்தாகும். துகாரம் மகாராஜின் திறமை லௌகீகத்தை, பரமார்த்திகமாக மற்றுவதே ஆகும். அவருடைய அபங்கங்களில், முழு உலகமே அர்த்தமுள்ளதாக மாறி விடுகிறது. அவைகள், மராட்டிய கலாசாரத்தின் மற்றும் மராட்டிய மொழியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இயற்றப்படிருந்தாலும், உலகத்தினர் அனைவருக்கும் பொதுவானதாகவும், காலவரையறை இன்றி, மனித இனம் பின்பற்றத் தக்கதாகவும் உள்ளது."
- ஸ்ரீ திலீப் புருஷோத்தம சித்ரே எழுதிய புன்ஹா துகாரம் (மறுபடியும் துகாரம்) என்ற நூலிலிருந்து.
The Longman Anthology
World Literature
David Damrosch
General Editor
Volume C
The Early Modern Period
Jane Tylus
David Damrosch
with contributions by
Pauline Yu
and
Sheldon Pollock
लघु कथा

ஏக ப்ரேமகுஜ ஐகே(ம்) ஜகஜேடீ,
ஆடவலீ கோஷ்டீ ஸாங்கதஸே(ம்). (௧)
ஏக ம்ருகீ தோன்ஹீ பாடஸா(ம்)ஸஹித,
ஆனந்தே(ம்) சரத ஹோதீ வனீ(ம்). (த்ரு)
"ஹே ஜகஜேடி! (உலகின் முதல்வனே) பிரேமை நிறைந்த உன்னுடைய ஒரு கதையை, நினைவில் உள்ளபடி, சொல்லுகிறேன். கேட்பாயாக." ஒரு பெண்மான், தன்னுடைய இரண்டு குட்டிகளுடன், காட்டில் ஆனந்தமாக, புல் மேய்ந்து கொண்டிருந்தது.

அவசிதா(ம்) தேதே(ம்) பாரதீ பாதலா,
கேவூனியா(ம்) ஆலா ஸ்வானே(ம்) தோன்ஹீ. (௨)
அப்போது, ஒரு வேடன் இரண்டு வேட்டை நாய்களுடன், அங்கே வந்தான்.

ஏகீகடே த்யாணே(ம்) சிரில்யா வாகுரா,
டேவிலே(ம்) ஸ்வானபுத்ரா(ம்) ஏகீகடே. (௩)
(மான்களைக் கண்ட) அவன், ஒரு பக்கம் வலையை விரித்துக் கட்டினான். மற்றொரு பக்கம், வேட்டை நாய்கள் இரண்டையும் நிறுத்தி வைத்தான்.

ஏகீகடே தேணே(ம்) வோணவா லாவிலா,
ஆபண ராஹிலா ஏகீகடே. (௪)
வேறொரு பக்கத்தில், தீயை மூட்டினான். நான்காவது பக்கத்தில், தான் போய் நின்றுகொண்டான்.

சஹூ(ம்)கடோனியா(ம்) ம்ருகே(ம்) வோடியேலீ(ம்),
ஸ்மரோ(ம்) தீ(ம்) லாகலீ(ம்) நாம துஜே(ம்) (௫)
ராமா க்ருஷ்ணா ஹரீ கோவிந்தா கேசவா,
தேவா(ம்)சியா தேவா பாவே(ம்) ஆதா(ம்) (௮)
கோண ரக்ஷீ ஆதா(ம்) ஐசியே ஸங்கடீ(ம்),
பாபா ஜகஜேடீ துஜவீண. (௭)
மான்கள், நான்கு பக்கங்களிலும் (இவ்வாறு தப்பித்து ஓட முடியாதபடி, ஆபத்தால்) சூழப்பட்டன. அப்போது, அவைகள் உந்நாமத்தை ஸ்மரித்தன. "ராமா, கிருஷ்ணா, ஹரி, கோவிந்தா, கேசவா, தேவாதிதேவா, எங்களை இப்போதே காப்பாற்று. தந்தையே! ஜகஜேடி! இப்படிப்பட்ட ஸங்கடத்திலிருந்து, உன்னைத் தவிர வேறு யாரால் எங்களை ரக்ஷிக்க முடியும்?" என்று துதித்தன.

ஆயிகோனீ து(ம்)ஹீ தயா(ம்)சீ(ம்) வசனே(ம்),
க்ருபா அந்த:கரணே(ம்) களவளிலா(ம்). (௮)
ஆக்ஞா தயே காளீ(ம்) கேலீ பர்ஜன்யாஸீ,
வேகீ(ம்) பாவகாஸீ விஜவாவே(ம்). (௯)
அவைகளின் பிரார்த்தனையைக் கேட்டு, நீ மனதில் கிருபைகொண்டு, உருகிவிட்டாய். உடனே, வேகமாக (மழை பொழிந்து) நெருப்பை அணைக்க, மேகங்களுக்கு உத்தரவிட்டாய்.

ஸஸே(ம்) ஏக தேதே(ம்) உடவுனீ பளவிலே(ம்),
தயா பாடீ(ம்) கேலீ(ம்) ஸ்வானே(ம்) தோன்ஹீ. (௧0)
ம்ருகே(ம்) சமகோனீ ஸத்வர சாலலீ(ம்),
கோவிந்தே(ம்) ரக்ஷிலீ(ம்) ம்ஹணோனியா(ம்). (௧௧)
அதே சமயம் (நாய்களுக்கு எதிரே), ஒரு முயலைத் தோற்றுவித்து, ஓடவிட்டாய். இரண்டு நாய்களும் அதன் பின்னால் ஓடின. உடனே, மான்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிப்போயின. கோவிந்தன், இவ்வாறாக அவைகளை ரக்ஷித்தான்.

ஐஸா தூ(ம்) க்ருபாளு தயாளூ ஆஹேஸீ,
ஆபுல்யா பக்தா(ம்)ஸீ ஜீவலக. (௧௨)
ஐஸீ துஜீ கீர்தி ஜீவீ(ம்) ஆவடதீ,
ரகுமாயீச்யா பதீ துகா ம்ஹணே. (௧௩)
(தேவா!) நீ இப்படிப்பட்ட கிருபை, தயை நிறைந்தவனாகவும், தன் பக்தர்களின் உயிர்த் தோழனாகவும் இருக்கிறாய். துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார். "ஹே ரகுமாயியின் பதியே! இப்படிப்பட்ட உன்னுடைய கீர்த்தி எங்களுக்கு மிகவும் பிரியப்பட்டதாக இருக்கிறது".
சிறுகதைகள்
ஸுக வாடே துஜே வர்ணிதா(ம்) பவாடே,
ப்ரேம மிடீ படே வதனாஸீ. (௧)
வ்யாலே தோன்ஹீ பக்ஷீ ஏகா வ்ருக்ஷாவரீ,
ஆலா துராசாரீ பாரதீ தோ. (௨)
வ்ருக்ஷாசியா மாதா(ம்) ஸோடிலா ஸஸாணா,
தனுஷ்யாஸி பாணா லாவியேலே(ம்). (௩)
தயே காளீ(ம்) துஜ பக்ஷீ ஆடவிதீ,
தா(ம்)வே கா ஸ்ரீபதீ மாயபாபா. (௪)
உடோனியா(ம்) ஜாதா(ம்) ஸஸாணா மாரீல,
பைஸதா(ம்) விந்தீல பாரதீ தோ. (௫)
ஐகோனியா(ம்) தா(ம்)வா தயா(ம்) பக்ஷியா(ம்)சா,
தரிலா ஸர்பாசா வேஷ வேகீ(ம்). (௬)
டங்கோனி பாரதீ பூமீஸீ பாடிலா,
பாண தோ லாகலா ஸஸாண்யாஸீ. (௭)
ஐஸா தூ(ம்) க்ருபாளு ஆபுலியா தாஸா,
ஹோஸீல கோ(ம்)வஸா ஸங்கடீ(ம்)சா. (௮)
துகா ம்ஹணே துஜீ கீர்தி த்ரிபுவனீ(ம்),
வேதாசியே வாணீ வர்ணவேனா. (௯)
(விட்டலா!) உன்னை வர்ணித்துப் பாடினால், பிரேமையினால் வாய் இனிக்கிறது, (மனதில்) ஸுகம் உண்டாகிறது. (௧) ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் உட்கார்ந்திருந்தன. அப்போது கொடூரமான வேடன் ஒருவன் அங்கே வந்தான். (௨) (பறவைகள் மேலே பறந்து தப்பிக்காமல் இருக்க, தன் கையிலிருந்த, சிறு பறவைகளைப் பிடிக்கப் பழக்கப்பட்ட) ராஜாளிப் பறவையை மரத்தின் மீது பறக்க விட்டான். கையில் வில்லும் அம்பும் எடுத்துக் குறி வைத்தான். (௩) அப்போது பக்ஷிகள், "ஸ்ரீபதியே! அம்மையப்பா! பறந்து போனால், ராஜாளி கொல்லும். உட்கார்ந்திருந்தால் வேடன் (அம்பெய்து) கொல்லுவான். உடனே ஓடி வா. (எங்களைக் காப்பாற்று)", என்று உன்னைத் துதித்தன. (௪,௫) நீ பக்ஷிகளின் குரலைக் கேட்டு உடனே (வந்து), ஒரு பாம்பாக உருவெடுத்தாய். (௬) வேடனைக் கொத்தி, பூமியில் விழ வைத்தாய். (அவன் கையிலிருந்து விடுபட்ட) அம்பை, ராஜாளியின் மீது தைக்க வைத்தாய். (௭) நீ தன்னுடைய பக்தர்களின் சங்கடங்களைத் தீர்க்கும் கிருபை நிறைந்தவனாக இருக்கிறாய். (௮) துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், "மூவுலகிலும் பரவியுள்ள உனது கீர்த்தியை வேத வாணியாலும் வர்ணிக்க முடியாது".
காய துஜீ தோரீ வர்ணூ(ம்) மீ பாமர,
ஹோஸீ தயாகர க்ருபாஸிந்து. (௧)
துஜ ஐஸீ தயா நாஹீ(ம்) ஆணிகா(ம்)ஸீ,
ஐஸே ஹ்ருஷீகேசீ நவல ஏக. (௨)
குருக்ஷேத்ர பூமீவரீ பக்ஷீ வ்யாலே,
த்ருணாமாஜீ(ம்) கேலே(ம்) கோடே(ம்) த்யா(ம்)னீ(ம்). (௩)
அகஸ்மாத் தேதே(ம்) ரணகாம்ப ரோவிலா,
யுத்தாசா நேமிலா டாவ தேதே(ம்). (௪)
கௌரவ பாண்டவ தளபர தோன்ஹீ,
ஜுஞ்ஜாவயா ரணீ(ம்) ஆலே தேதே(ம்). (௫)
தயே காளீ(ம்) துஜ பக்ஷீ ஆடவீதீ,
பாவ பா ஸ்ரீபதீ ம்ஹணோனியா(ம்). (௬)
ஹஸ்தீ கோடே ரத தேதே(ம்) தா(ம்)வதீல,
பாஷாண ஹோதீல சதசூர்ண. (௭)
ஐஸியே ஆகாந்தீ(ம்) வாஞ்சோ(ம்) கைஸே பரீ,
தா(ம்)வ பா ஸ்ரீஹரீ லவலாஹே(ம்). (௮)
டாகோனியா(ம்) பிலீ(ம்) கைஸே(ம்) ஜாவே(ம்) ஆதா,
பாவே(ம்) ஜகந்நாதா லவலாஹீ(ம்). (௯)
ஆலீ தியே காளீ(ம்) க்ருபா துஜ்யா சித்தா,
அநாதா(ம்)ச்யா நாதா நாராயணா. (௧0)
ஏகா கஜாசியா கண்டீ(ம்) கண்டா ஹோதீ,
பாடிலீ அவசிதீ தயாவரீ. (௧௧)
அடரா திவஸ தேதே(ம்) த்வந்த்வயுத்த ஜாலே(ம்),
வாரா ஊன லாகலே(ம்) நாஹீ(ம்) தயா(ம்). (௧௨)
ஜுஞ்ஜ ஜால்யாவரீ தாவிலே(ம்) அர்ஜுனா,
து(ம்)ஹீ(ம்) நாராயணா பக்ஷியா(ம்)ஸீ. (௧௩)
பாஹே(ம்) ஆபுலியா தாஸா(ம்) ம்யா(ம்) ரக்ஷிலே(ம்),
ரணீ(ம்) வாஞ்சவிலே(ம்) கைஸா பரீ. (௧௪)
ஐஸீ துஜ மாயா ஆபுல்யா பக்தா(ம்)சீ,
மாவுலீ ஆமுசீ துகா ம்ஹணே. (௧௫)
(பாண்டுரங்கா!) தயகரனாக, கிருபைக் கடலாக இருக்கும் உன்னுடைய பெருமையை, பாமரனான நான் எவ்வாறு வர்ணிப்பேன்? (௧) ரிஷிகேசா! வேறு எவருக்கும் உன்னைப் போன்று இவ்வளவு தயை கிடையாது என்பது பிரசித்தம். (௨) குருக்ஷேத்திர பூமியில், ஒரு பக்ஷி புல் தரையில் கூடுகட்டி (குஞ்சுகளுடன்) வசித்து வந்தது. (௩) திடீரென்று, அந்த இடத்தை யுத்தகளமாகத் தேர்ந்தெடுத்து, யுத்தஸ்தம்பம் நாட்டினார்கள். (௪) போர் செய்ய, கௌரவர்கள், பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் தமது சைனியங்களுடன் அங்கே வந்தார்கள். (௫) யானைகள், குதிரைகள், ரதங்கள், ஆகியவைகள் (யுத்த களத்தில்) ஓட ஆரம்பித்தன. கற்கள் எல்லாம் பொடிப் பொடியாயின. அப்போது பக்ஷி, தந்தையாகவும், ஸ்ரீபதியாகவும் உள்ள உன்னை (சரண்) அடைவோம் என்று, (௬,௭) "இப்படிப்பட்ட ஆபத்திலிருந்து எவ்வாறு தப்புவேன்? இப்போது, குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு எப்படிப் போவேன்? ஜகந்நாதா! உன்னையே சரணடைந்தேன்", என்று துதித்தது. அநாதைகளின் நாதனே! நாராயணா! அப்போது உனதுள்ளத்தில் (பக்ஷியிடத்தில்) கிருபை தோன்றியது. தந்தையே! ஸ்ரீஹரி! நீஉடனே ஓடி வந்தாய். (௮,௯,௧0) (பக்ஷிகளை ரக்ஷிக்க) ஒரு யானையின் கழுத்தில் இருந்த (பெரிய) மணியைப் பறித்து, அவைகளை மூடி வைத்தாய். (௧௧) அங்கே, ௧௮ நாட்கள் அதிகோரமான யுத்தம் நடந்தது. (பக்ஷிகளின் மீது) காற்றோ, வெய்யிலோ படவில்லை. (௧௨) நாராயணா! நீ, யுத்தம் முடிந்தவுடன், "என் பக்தர்களை யுத்த களத்திலிருந்து எப்படி ரக்ஷித்துள்ளேன், பார்த்தாயா", என்று கூறி, அர்ஜுனனுக்கு பக்ஷிகளைக் காண்பித்தாய். (௧௩,௧௪) துகாராம் மஹாராஜ் கூறுகிறார், "பகவானே! நீ பக்தர்களின் பிரேமைக்குரியவன். எங்களுக்குத் தாயானவன்".
Audio
Tukaram's abhang - Sundar Te Dhyan describes the idol Vitthal in the temple town of Pandharpur. The idol of Vitthal at Pandharpur is a beautiful piece of sculpture, its arms akimbo and a confident expression on its face seeming to signify a kind of potent non-violence. This is in marked contrast to the fierce Hindu gods with several hands, each bearing some weapon.
Sundar Te Dhyan
The abhang has been sung by Tukaram Ganpathi. Ganpathi born in a traditional bhajan singer's family hails from Kadayanallur, Tirunelveli, Tamil Nadu. Tamil Nadu is a state at the southern most tip of India. The abhang is traditionally sung at the end of Sampradayik bhajan in Tamil Nadu, while in Maharashtra - the home state of Tukaram(1609-1650) the abhang is sung at the beginning of a kirtan. The file size is 7.8 MB.
