|
|
|
|
|
|
விட்டலனின் சோபை |
|
(௧)
ஸுந்தர தே த்யான உபே விடேவரீ,
கர கடாவரீ டேவூனியா;
துளசீஹார களா காஸே பீதாம்பர,
ஆவடே நிரந்தர ஹேசி த்யான;
மகர குண்டலே தளபதீ ச்ரவணீ,
கண்டீ கௌஸ்துபமணி விராஜித;
துகா ம்ஹணே மாஜே ஹேசி ஸர்வ ஸுக,
பாஹீன ஸ்ரீமுக ஆவடீனே. |
|
|
|
பொருள்: துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், "விட்டலன், தியான ஸுந்தரனாக இடுப்பிலே
கைகளை வைத்துக்கொண்டு, செங்கல் மீது நிற்கிறான். கழுத்தில் துளஸி ஹாரமும். இடையில்
பீதாம்பரமும் அணிந்திருக்கிறான். அவனுடைய இந்த தியானம் எனக்கு நிரந்தரமான பிரியத்தை
அளிக்கிறது. காதுகளில் மகரகுண்டலங்கள் மின்னுகின்றன. கழுத்தில் கௌஸ்துபமணி
விளங்குகிறது. பிரேமையுடன் அவனுடைய ஸ்ரீமுகத்தை தரிசிப்பேன். இதுவே எனக்கு ஸர்வ
ஸுகமாகும்". |
|
|
|
|
பொருளடக்கம் |
|
|
|