தர்மாசே பாளண,
கரணே பாகண்ட கண்டண;
ஹேசி ஆ(ம்)ஹா கரணே காம,
பீஜ வாடவாவே நாம;
தீக்ஷ்ண உத்தரே,
ஹாதீ கேவூனி பாண பிரே;
நாஹீ பீட பார,
துகா ம்ஹணே ஸானா தோரா.
பொருள்: துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், "நான் செய்ய வேண்டிய
காரியங்கள் - (பாகவத) தர்மத்தைப் பரிபாலிக்க வேண்டும். (அதற்கு
எதிரான) பாஷண்ட மதங்களைக் கண்டனம் செய்ய வேண்டும். (பாகவத
தர்மத்தின்) விதையான நாம ஸங்கீர்த்தன மார்கத்தை பிரசாரம்
செய்து, வளர்க்க வேண்டும். (பாஷண்டிகளின் கேள்விகளுக்குச்
சரியான) பதில் என்ற கூர்மையான அம்பைக் கையில் வைத்துக் கொண்டு
சுற்ற வேண்டும். "(கேள்வி கேட்பவன்) கௌரவமானவன், அதிகாரம்
படைத்தவன், சிறியவன், பெரியவன் என்று நான் பார்க்க மாட்டேன்".