ஸத்குருராயே க்ருபா மஜ கேலீ,
பரி நாஹீ கடலீ ஸேவா கா(ம்)ஹீ;
ஸாம்படவிலே வாடே ஜாதா கங்கா ஸ்நானா,
மஸ்தகீ தோ ஜாணா டேவிலா கர;
போஜன மாகதீ தூப பாவ சேர,
படிலா விஸர ஸ்வப்னா மாஜீ;
கா(ம்)ஹீ களே அந்தராய,
ம்ஹணோனியா காய த்வரா ஜாலீ;
ராகவசைதன்ய கேசவசைதன்ய,
ஸாங்கிதலீ கூண மாளிகேசீ;
பாபாஜீ ஆபலே ஸாங்கீதலே நாம,
மந்த்ர திலா ராம்க்ருஷ்ணஹரி;
மாக சுத்த தசமீ பாஹூனீ குருவார,
கேலா அங்கீகார துகா ம்ஹணே.
பொருள்: துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், "ஸத்குருராயன் எனக்கு
கிருபை செய்தார். ஆனால், நான் அவருக்கு எந்த ஸேவையும்
செய்யவில்லை. (ஸ்வப்பனத்தில்) கங்கா ஸ்நானத்திற்குப்
போகும்போது வழியில் அவரைக் கண்டேன். கையை என் சிரஸில்
வைத்தார். போஜனத்திற்காக கால் சேர் (சுமார் ௧00 கிராம்) நெய்
கேட்டார். அது ஸ்வப்பனத்தில் மறந்துவிட்டது. இடையில் என்ன தடை,
அவசரம் ஏற்பட்டது என்பது எதுவும் தெரியவில்லை. ராகவ சைதன்யர்,
கேசவ சைதன்யர் என்று குரு பரம்பரையின் ரஹஸ்யத்தை எனக்குச்
சொன்னார். தன்னுடைய பெயர் பாபாஜி என்றும் கூறினார்.
"ராம்க்ருஷ்ணஹரி" என்ற மந்திரத்தை உபதேசித்தார். எனக்கு
குருவின் அங்கீகாரம் கிடைத்த தினம் மாசி மாஸம், சுக்ல பக்ஷ,
தசமி கூடிய, வியாழக் கிழமையாகும்". (உபதேசம் கிடைத்த இடம்
ஓதூர் என்ற கிராமம். வருஷம் - ௧௬௩௨).