Font Problem

       
 
 

 

       ஸ்ரீ துகாராம் கணபதி மஹாராஜ் அவர்கள் ௧௯௯0ம் ஆண்டு கடையநல்லூரில் (தமிழ்நாடு) விஷ்வ வாரகரி ஸம்ஸ்தானை நிறுவி அதன் அதிகாரியாக இருந்து

வருகிறார். இந்தியாவிலும் மற்றும் பல வெளிநாடுகளிலும் சென்று, ஹரி கீர்த்தன் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். ஸமஸ்தான், மஹிபதி மஹாராஜின் துகாராம் சரித்திரத்தின் தமிழ் மொழி பெயர்ப்பை வெளியிட்டது. அடுத்ததாக, ௪0 பல்வேறு ஸந்துக்கள் பாடிய ௫௨௨ அபங்கங்கள் அடங்கிய ’ஸந்த்

 

வாணி’ என்ற நூல் பதிப்பிக்கப் பட்டது. இடது பக்கம் மராட்டி மூலமும், ஹிந்தி அர்த்தமும், வலது பக்கம் தமிழ் எழுத்தில் அதே அபங்கமும், அதன் தமிழ் அர்த்தமும் கொடுக்கப் பட்டிருப்பது அதன் தனிச் சிறப்பாகும். அந்நூலிலுள்ள துகாராம் மஹாராஜின் அபங்கங்கள், (தமிழ்ப் பகுதி) அப்படியே தரப்படுகிறது.

 
  விட்டலனின் சோபை  

(௧)
ஸுந்தர தே த்யான உபே விடேவரீ,
கர கடாவரீ டேவூனியா;
துளசீஹார களா காஸே பீதாம்பர,
ஆவடே நிரந்தர ஹேசி த்யான;
மகர குண்டலே தளபதீ ச்ரவணீ,
கண்டீ கௌஸ்துபமணி விராஜித;
துகா ம்ஹணே மாஜே ஹேசி ஸர்வ ஸுக,
பாஹீன ஸ்ரீமுக ஆவடீனே.

 

பொருள்: துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், "விட்டலன், தியான ஸுந்தரனாக இடுப்பிலே கைகளை வைத்துக்கொண்டு, செங்கல் மீது நிற்கிறான். கழுத்தில் துளஸி ஹாரமும். இடையில் பீதாம்பரமும் அணிந்திருக்கிறான். அவனுடைய இந்த தியானம் எனக்கு நிரந்தரமான பிரியத்தை அளிக்கிறது. காதுகளில் மகரகுண்டலங்கள் மின்னுகின்றன. கழுத்தில் கௌஸ்துபமணி விளங்குகிறது. பிரேமையுடன் அவனுடைய ஸ்ரீமுகத்தை தரிசிப்பேன். இதுவே எனக்கு ஸர்வ ஸுகமாகும்".

     

அடுத்த அபங்கம்

 
 

பொருளடக்கம்